Bharathiar University Distance Education | பாரதியார் பல்கலைக்கழகம் தொலைத்தூர கல்வி
Bharathiar University Distance Education
பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பாரதியார் பல்கலைக்கழக தொலைமுறைக் கல்விக்கூடம், பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று குறைந்த கல்வி கட்டணத்தில் தரமான கல்வியைத் திறந்த மற்றும் தொலைமுறையில் 1992 முதல் வழங்கி வருகிறது. தொடர்ந்து நடப்பு கல்வியாண்டு முதல் திறந்த மற்றும் தொலைமுறை கல்வியுடன் இணைய வழியிலும் பட்டங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Read Also: நாமக்கல் அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்
முதற்கட்டமாக இணையவழியில் 6 பட்டப்படிப்புகள் நடத்துவதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. அவற்றுள் இரண்டு இளநிலை பட்டங்கள் (பி.ஏ ஆங்கில இலக்கியம், பிபிஏ (பொது) ) நான்கு முதுநிலை பட்டங்கள் (எம்ஏ தமிழ் இலக்கியம், எம்ஏ ஆங்கில இலக்கியம், எம்ஏ பொருளாதாரம் மற்றும் எம்.காம் வணிகவியல்)
இணையவழியில் திறந்த மற்றும் தொலைமுறையில் (ஓடிஎல்) நடத்தி வழங்கப்படும் பட்டங்கள் அனைத்து பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெற்ற உயர் கல்வி நிறுவனங்கள் வழக்கமான முறையில் வழங்கும் பட்டத்திற்கு இணையானது என்பதால் இம்முறை வழிக்கல்வி உயர்கல்வி பெற விரும்பும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.
இணைய வழியில் நடத்தப்பெறும் பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் விண்ணப்பம் பதிவு செய்தல் தொடங்கி, கல்விகட்டணம் பாடம் நடத்துதல், பாடத்தரவுகள் (எழுத்து மற்றும் காணொளி) பதிவிடுதல், தேர்வு தேர்ச்சி முடிவுகள் அறிவித்தல், சான்றிதழ் வழங்குதல் என அனைத்து செயற்பாடுகளும் இணையவழியிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
திறந்த மற்றும் தொலைமுறையில் அறிமுகப்படுத்தபெறும் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை இணையவழியிலேயே பெறலாம். மேலும் விவரங்களுக்கு என்ற
இணையதளத்தை பார்வையிடலாம். மாணவர் பதிவு தொடங்கும் நாள் 28.10.2022 மற்றும் இறுதிநாள் 15.11.2022.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.