You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

B Sc Visual Communication Course Details in Tamil | Visual Communication course in Tamil | இதழியல் படிப்பு | விஷுவல் கம்யூனிகேஷன்

B Sc Visual Communication Course Details in Tamil

B Sc Visual Communication Course Details in Tamil | Visual Communication course in Tamil | இதழியல் படிப்பு | விஷுவல் கம்யூனிகேஷன்

B Sc Visual Communication Course Details in Tamil

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஊடகத்துறைக்கு தேவையான தகுதிகளை கொண்ட இளைஞா்களை வளர்ந்தெடுக்கக் கூடியவையதாக இதழியல் சார்ந்த கல்வி உள்ளது. இதில் இளநிலை இதழியல், இளநிலை அறிவியல்-காட்சி ஊடகவியல், முதுநிலை இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்புகள், இளைஞர்களை சிறந்த ஊடகவியலாளர்களாக உருவாக்கக் கூடிய படிப்புகள் உள்ளன.

இளநிலை இதழியல் பட்டப்படிப்புகள் மூன்றாண்டு கல்வியாகவும், முதுநிலை பட்டப்படிப்புகள் இரண்டாண்டு கல்வியாகவும் உள்ளன. மேல்நிலை கல்வி முடித்தவர்கள், இளநிலை இதழியல் பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவா்கள் முதுநிலை படிப்பிலும் சேரலாம். இந்த பட்டப்படிப்புகளின் பாட திட்டங்கள் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஊடகத்தின் முதல் நிலை பணியாளர் வரைக்குமான அனைத்து தகுதிகளையும் அளிக்கக்கூடியவையாக உள்ளன.

நியூஸ் ரிப்போா்ட்டிங், எடிட்டிங், ஊடகசட்டம் மற்றும் நெறிமுறைகள், போட்டோ ஜெர்னலிசம், பக்க வடிவமைப்பு, கார்ட்டூன், ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பு, குறும்படம் தயாரிப்பு, ஊடக நிர்வாகம், வியாபரத் தொடர்பு, விளம்பரம், மக்கள் தொடர்பு போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டவையாக இப்படிப்புகள் இருப்பதாக கூறுகிறார், மதுரை காமராஜா் பல்கலைக்கழக இதழியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஜெனீபா.

Read Also: Media Certificate Course in Tamil

பல்துறை திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே தற்போது இதழியல் துறையில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த வகையில், ஒருவர் ஊடகவியலாளர் ஆக வேண்டும் என்றால் மொழித்திறன், தொழில்நுட்ப அறிவு உட்பட அனைத்து துறை சார்ந்த அறிவு கொண்டவராக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கான வாய்ப்புகளை தகுதிகளைத் தருவதே இதழியல், மக்கள் தகவல் தொடர்பியல், காட்சித் தொடா்பியல் படிப்புகளின் நோக்கம்.

பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு செய்தி அளிப்பது, செய்தியை தொகுப்பது, கார்ட்டூன், பக்க வடிவமைப்பு ஆகிய பாடங்கள் இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் பொதுவான பாடங்களாக இருக்கும். இளங்கலை அறிவியல் – காட்சித் தொடர்பியல் (பி.எஸ்சி – விஷூவல் கம்யூனிகேசன்) அறிவியல் சார்ந்த கல்வி என்பதால் செய்முறை பயிற்சிகளுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். காட்சி ஊடகங்களுக்கு செய்தி தயாரிப்பது, வெப் ஜர்னலிசம், செயலிகளுக்கு செய்தி தயாரித்தல், யூடியூபுகளுக்கு ஸ்கிாிப்ட் தயாரித்தல், வீடியோ பதிவு செய்யும் முறை உள்ளிட்டவை விஷூவல் கம்யூனிகேசன் படிப்பில் இருக்கும்.

முழுக்க, முழுக்க செய்தியும் அதனை சார்ந்த திறன் மேம்பாடுகளை ஊக்குவிக்கக்கூடியதாக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் படிப்புகள் இருக்கும். செய்தியுடன், பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்டதாக விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பு இருக்கும். இந்த படிப்பு தமிழகத்தில் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ளதாக உள்ளது. முதுநிலை இதழியல், முதுநிலை மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் (எம்ஏ ஜெர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேசன்) படிப்புகளே இதழியல் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

எந்த பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருந்தாலும், முதுநிலை இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் பயிலலாம். ஆனால், முதுநிலை இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் நவீன தொழில்நுட்ப கருவிகளை கையாளுதல் குறித்த பயிற்சிகளும் கிடைக்கும். முதுநிலை இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் பயிற்சி மாணவர்களுக்கு அச்சு ஊடகத்திலும், காட்சி ஊடகத்திலும் நேரடி பயிற்சி கிடைக்கும். இதனால், அந்த மாணவர்களுக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகத்தின் அனைத்து பணிகள் குறித்து புரிதல் ஏற்படும். அதனுடன், மாணவர்களுக்கான பணி வாய்ப்புகளுக்கும் வழிவகை ஏற்படும்.

அச்சு ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் பல்வேறு நிலையில் பணி வாய்ப்புகள் உள்ளன. செய்தியாளர், உதவி ஆசிரியர், பக்க வடிவமைப்பாளர், போட்டோகிராபர், கேலி சித்திரம் வரைபவர் என பல பணிகள் உள்ளன. காட்சி ஊடகங்களில் செய்தியாளர், செய்தி வாசிப்பாளர், வீடியோ எடிட்டர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல்வேறு பணிகள் உள்ளன. இவைத்தவிர, சமூக ஊடகங்களை நிர்வகிக்கும் சோஷியல் மீடியா மேனேஜர், செய்தி செயலிகளை நிர்வகித்தல், கன்டென் எடிட்டர், வெப்சைட் மேலாளர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என ஏராளமான பணி வாய்ப்புகள் ஊடகத்துறையில் உள்ளன.