You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Anna University | அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி 225 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

Typing exam apply Tamil 2023

Anna University | அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி 225 கல்லூரிகளுக்கு நோட்டீஸ், காரணம் என்ன?

Anna University | அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்

தமிழகத்தில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு, அதன் கீழ் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேலும் குறைபாடுகளை இரண்டு வாரத்திற்குள் சரி செய்தால் மட்டுமே நடப்பாண்டில் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும், இதுதொடர்பான உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அங்கீகார நீட்டிப்பும், மாணவர் சோக்கைக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. முன்னதாக 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த அண்ணா பல்கலைக்கழகம், 225 கல்லூரிகளில் உரிய கட்டமைப்பு வசதிகள், தகுதியான பேராசிரியர்கள், உரிய கட்டமைப்பு இல்லாததை கண்டறிந்த நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Read Also This: B.E Part Time admission 2022-23 | பகுதி நேர பி.இ பட்டபடிப்பு விண்ணப்பிக்கலாம்|ptbe-tnea.com

அண்ணா பல்கலைக்கழகம் எத்தனை பொறியியல் கல்லூரிகள் செயல்படுகிறது?

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அதன் உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் தவிர 476 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஏஐசிடிஇ, நேக் விதிகளின்படி ஒவ்வொரு கல்லூரியிலும் நடத்தப்படுகின்ற பாடப்பிரிவுகளுக்கு உரிய அங்கீகாரம் பெற வேண்டும். எத்தனை பாடப்பிரிவுகள் நடத்தப்படுகிறதோ அந்த பாடப்பிரிவுகளுக்கு ஏற்ற வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், ஆசிரியர் பணியிடங்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை இருக்க வேண்டும். மேலும் அந்தந்த மாநிலங்களில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் இணைப்பும் பெற்றிருக்க வேண்டும்.

பொறியியல் கல்லூரிகளில் இவ்வளவு குறைபாடுகளா?

இந்த விதிகளின்படி தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வந்தன. அவற்றில் அடிக்கடி நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கு பிறகு சுமார் 44 கல்லூரிகள் போதிய வசதிகளை பூர்த்தி செய்யவில்லை என்று கூறி ஏஐசிடிஇ அங்கீகாரம் வழங்க மறுத்தது. அதனால், அந்த கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது 476 கல்லூரிகள்தான் இயங்கி வருகிறது. இவற்றில் நடத்தப்படுகின்ற பாடப்பிரிவுகளுக்கு போதிய ஆசிரியர் பற்றாக்குறை நீடித்து வருகிறது. இந்த நிலையில், அந்த கல்லூரிகள் மீது தெரிவிக்கப்பட்ட புகார்கள் பேரில் 2022-2023ம் ஆண்டுக்கான அங்கீகாரம் புதுப்பித்த 476 பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவினர், மே மற்றும் ஜூன் மாதங்களில் நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டது. குறிப்பாக, ஆர்க்கிடெக்சர், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை நடத்தும் கல்லூரிகளில் தகுதியில்லா ஆசிரியர்கள் பணியாற்றுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Read Also This:பொறியியல் கல்லூரிகள் 15க்கு மேற்பட்டவை மூடல்

ஆய்வுக்கூடங்கள் மற்றும் அவற்றில் உபகரணங்கள் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர இதர பொறியியல் கல்லூரிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அப்படி 225 கல்லூரிகளில் போதிய வசதிகள், விதிகளின்படி ஆசிரியர் நியமனங்கள் பின்பற்றப்படவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக 50 சதவீதம் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்த வசதிகளை பூர்த்தி செய்யவில்லை. மேற்கண்ட கல்லூரிகளில் 62 கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. அதற்கான ரேங்கில் 25 சதவீதம் பெற்றுள்ளன. 23 பொறியியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ள முதல்வர்கள் தகுதி இல்லாதவர்களாக இருக்கின்றனா்.

அதனால் தகுதியுள்ள முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீததத்திற்கும் கீழ் முரண்பாடுகள் உள்ள கல்லூரிகள் மீதான புகார்களுக்கு விளக்கம் அளிக்கவும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. 166 கல்லூரிகளில் 25 சதவீதத்திற்கும் கீழ் அடிப்படை வசதிகள் உள்ளன. சில கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தும் அவர்களுக்கு கொரோனா காலத்தில் ஊதியமும் வழங்கப்படவில்லை என்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஆய்வு குழுவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் என்னதான் கூறியுள்ளது?

இதையடுத்து அந்த கல்லூரிகள் இரண்டு வாரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்கவும், விதிகளின்படி அடிப்படை வசதிகள் செய்தல், உரிய ஆசிரியர்களை நியமித்தல் ஆகியவற்றை செய்ய வேண்டும். இல்லையென்றால், அந்த கல்லூரிகளின் இணைப்பு ரத்து செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது பொறியியல் கல்லூரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sources and Thanks to Tamil Murasu Evening daily.