You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Anna University Rank list PDF |tneaonline.org | பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு

Anna University Rank list PDF|

Anna University Rank list PDF |tneaonline.org | பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு

Anna University Rank list PDF

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு உயர் கல்வி அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, கடந்தாண்டு விட, இந்தாண்டு பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். அதன்படி பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 2,11,905 பேர். கடந்தாண்டு விட 36,977 பேர் கூடுதலாக பதிவு செய்துள்ளனர். பதிவு கட்டணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 1,69,080 பேர். இதிலும் கடந்தாண்டை விட 24,035 பேர் கூடுதலாகும்.

Also Read: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி 225 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு

நடப்பு கல்வியாண்டிற்கான தரவரிசை பட்டியலில் வெளியிடப்பட்ட நிலையில், அதில்1,58,157 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த தரவரிசை பட்டியலில் இடம் கிடைக்காதவர்களுக்கு அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், அரசு பள்ளியில் படித்த 22,587 மாணவா்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இதில் 9,891 மாணவிகள் ஆவார் மற்றும் இவர்கள் கல்லூரியில் சேர்ந்தால் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

விளையாட்டு பிரிவின் கீழ் 3,102 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,275 மாணவர்களின் சான்றிதழ் சாிபார்க்கப்பட்டு, 1,258 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. முன்னான் ராணுவத்தினர் வாரிசுதாரர் கீழ் 970 மாணவர்களும், மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் 203 மாணவர்களுக்கும் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில் பங்கேற்பார்கள். சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி தொடங்கும் மற்றும் பொதுப்பிரிவினர்க்கான கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும், என்றார்.

மேலும் அவர் கூறும்போது, தமிழகத்தில் 431 பொறியியல் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவிபெறும், தனியார், அண்ணா பல்கலைக்கழகம்) மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த கல்லூாிகளில் அரசு இடஒதுக்கீட்டின் கீழ் 1,48,811 இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் 65 சதவீதம் அரசு இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றன. இதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 10,965 இடங்கள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக துறைகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவை சோ்ந்த மாணவர்களுக்கு 2 சதவீத இடங்களான 175 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தரவரிணை எண்ணை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் காணலாம்.

Anna University Rank list PDF
Anna University Rank list PDF

tneaonline.org

To Check official Link - Click Here

மாணவர்கள் விண்ணப்பித்து தங்களது பெயர் தரவரிசை பட்டியலில் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ வரும் 19ம் தேதிக்குள் அருகில் உள்ள தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையத்தில் அணுகி குறைகளை பதிவு செய்யலாம், உண்மைதன்மை அறிந்து அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

TNEA General Category Rank List PDF - Download Here

Anna University Government School Students Rank List PDF - Download Here

Anna University Vocational Students Rank List PDF - Download Here