பொறியியல் படிப்பு கலந்தாய்வு, 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்
பொறியியல் படிப்பு கலந்தாய்வு
பொறியியல் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க, இதுவரை 1.52 லட்சம் பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும், அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., - பி.டெக், படிப்பில் கலந்தாய்வு வழியாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன் 20ல் துவங்கியது. வரும், 19ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய கால அவகாசம் உள்ளது.
Read Also This: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி 225 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்
நேற்று மாலை வரை, 1.52 லட்சம் பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1.05 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். 74 ஆயிரம் பேர் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாக, பொறியியல் கலந்தாய்வு குழு தெரிவித்துள்ளது.