Anna Cycle Race Coimbatore 2022 | அண்ணா சைக்கிள் போட்டி ரூ.5 ஆயிரம் முதல் பரிசு
Anna Cycle Race Coimbatore 2022
கோவை மாவட்ட ஆட்சியர் ஜிஎஸ் சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் செப்டம்பர் 15, 2022 அன்று காலை 9 மணிக்கு அண்ணா சைக்கிள் (மிதிவண்டி) போட்டிகள் கோவைப்புதூர் சிபிஎம் கல்லூரி சாலையில் பள்ளி மாணவ, மாணவியருக்கு
தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை மாவட்ட பிரிவு மூலமாக நடத்தப்படுகிறது.
மாவட்ட அளவிலான போட்டி
- 13 வயதுக்குட்பட்டவர்கள் (1.1.2010க்கு பிறகு பிறந்தவர்கள்) மாணவர்களுக்கு –- 15 கி.மீ தொலைவு போட்டி, மாணவியருக்கு -10 கி.மீ
- 15 வயதுக்குட்பட்டவர்கள் (1.1.2008க்கு பிறகு பிறந்தவர்கள்) மாணவர்களுக்கு –- 20 கி.மீ தொலைவு போட்டி, மாணவியருக்கு -15 கி.மீ
- 17 வயதுக்குட்பட்டவர்கள் (1.1.2006க்கு பிறகு பிறந்தவர்கள்) மாணவர்களுக்கு –- 20 கி.மீ தொலைவு போட்டி, மாணவியருக்கு -15 கி.மீ
Also Read: முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது
போட்டியில் பங்கேற்பவர்கள் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ்களை 13.9.2022 மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், நேரு விளையாட்டு அரங்கம், கோவை என்ற முகவரியில் அமைந்துள்ள அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அண்ணா சைக்கிள் போட்டி பரிசு
- முதல் பரிசு - ரூ.5000
- இரண்டாம் பரிசு - ரூ.3000
- மூன்றாம் பரிசு –- ரூ.2000
- 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு –- ரூ.250
இதுதவிர, தகுதிச்சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
இந்த போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண கியர் இல்லாத மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டியில் எதிர்பாராமல் நேரும் விபத்துகளுக்கும், தனிப்பட்ட இழப்புகளுக்கும் பங்குபெறும் மாணவ, மாணவிகளை பொறுப்பு ஏற்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.