Anbil Mahesh Poyyamozhi Latest News | குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்க
Anbil Mahesh Poyyamozhi Latest News
குழந்தைகள் எதிர்காலம் கருதி, பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி சட்டசபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 50000 மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத்தாதது குறித்து சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஏன் இவ்வளவு மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என தொலைபேசி வாயிலாக முதல் ஆளாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தன்னை தொடர்பு கொண்டு கேட்டதாக தெரிவித்தார்.
Read Also: அன்பில் மகேஷ் பேட்டி
தேர்வு எழுதாத மாணவர்களை துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், துணை தேர்வின் அவசியம் குறித்து தேர்வு எழுதாத மாணவர்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார். தயவு செய்து பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த அமைச்சர் குழந்தைகளை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.