Anbil Mahesh Latest Press Meet | பிளஸ்1 பொதுத்தேர்வு அமைச்சர் கூறியது என்ன?
Anbil Mahesh Latest Press Meet | பிளஸ்1 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பொதுவாக தனியார் பள்ளிகள் பிளஸ்1 பாடங்களை நடத்துவதில்லை, தேர்வுகள் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்தார். மதிப்பெண் முறையில் மாற்றம் கொண்டு வந்தார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிளஸ்1 பொதுத்தேர்வை பள்ளி கல்வித்துறை ரத்து செய்யப்போவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
Also Read: போதை வஸ்து மாணவர்கள் பயன்படுத்தினால் ஆசிரியர் மீது நடவடிக்கை
அப்போது பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு, அமைச்சர் கூறியதாவது, சில தனியார் பள்ளிகள் பிளஸ் 1 பாடங்களை முறையாக நடத்துவதில்லை என்ற புகார்கள் வருகிறது. பிளஸ் 1 பாடங்களை நடத்தவில்லை என்றால், மாணவர்கள் போட்டி தேர்வை எழுதும்போது, கேள்விகளை எதிர்கொள்ளாமல் சிரமப்படுகின்றனர். பிளஸ் 1 பொதுத்தேர்வு தெடர்ந்து நடத்தப்படும், தனியார் பள்ளிகள் கண்காணிக்கப்படும்,
இவ்வாறு அவர் கூறினார்.