Anbil Mahesh latest News |அன்பில் மகேஷ் மருத்துவமனையில் திடீர் அனுமதி
Anbil Mahesh latest News
தமிழகத்தின் பள்ளி கல்வி அமைச்சராக இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. கடந்த சில மாதங்களாக பள்ளி கல்வித்துறையின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம், கல்வி அதிகாரிகள் இடையேயான ஆலோசனை கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்று, கல்விப்பணிகளை கவனித்து வந்தார்.
Read Also: Illam Thedi Kalvi Salary | இல்லம் தேடி தன்னார்வலர்கள் சம்பளம்
இந்த நிலையில், அவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் நேற்று மாலை முதல் உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதை தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
முதலில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா தொற்று இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அவர் தொடர்ந்து மேலும் இரண்டு நாட்கள் அவர் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.