Actor Vijay Latest News in Tamil | விஜய் இரவு பாடசாலை தொடங்க உள்ளார்
Actor Vijay Latest News in Tamil
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய் இரவு பாடசாலை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் 17ம் தேதி நடிகர் விஜய் 234 தொகுதி அளவில் பொது தோ்வில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். மேலும், அவா் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்றும் பேசினார். இது அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாக மாறியது.
Read Also: கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை
இதற்கிைடயில் தற்போது தொகுதி பொறுப்பாளர்களை சந்தித்து, கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இதுதவிர தொகுதி சார்ந்த பிரச்சனைகளையும் கேட்டறிந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிைலயில், மாணவர்களை மேலும் ஊக்கமளிக்கும் வகையிலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பிலும் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் ெபறும் வகையிலும் இரவு பாடசாலை தொடங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. படிப்பகம், பயிலகம், கல்வியகம், அறிவொளியகம் என்ற பெயர்களில் ஒன்றை இத்திட்டத்திற்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை காமராஜர் பிறந்தநாளில் தொடங்க உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது.