தனியார் பள்ளி மீது நடவடிக்கை கோரி - கல்வித்துறை செயலருக்கு புகார்
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாஷா, பள்ளி கல்வித்துறை செயலருக்கு அனுப்பிய புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியமூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் பயின்ற மாணவி உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் 17/07/2020 அன்று சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றது.
Also Read: தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை நோட்டீஸ்
இந்த சம்பவங்களில் தொடர்ச்சியாக 18/07/2022 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை என்று தனியார் பள்ளி சங்கங்கள் அறிக்கை வெளியிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பல பெற்றோர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்கள். இதனை அறிந்து மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தமிழக கல்வித்துறையும் தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கக்கூடாது மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவை மீறி கோவை மாவட்டத்தில் குறிப்பாக மேட்டுப்பாளையம் பகுதியில் பல தனியார் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது. இதனால் அங்கு பயிலும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் தனியார் பள்ளிகள் அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது. ஆகவே தயவு கூர்ந்து தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை கண்காணிக்க குழு அமைத்தும் அரசின் உத்தரவை மீறியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த தனியார் பள்ளிகளை ஆய்வு செய்து அந்தப் பள்ளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். மேலும், வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் கண்காணிக்கவும் வேண்டுகிறேன்,
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.