தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை நோட்டீஸ்
தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை நோட்டீஸ்
கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவி உயிரிழப்பை தொடர்ந்து, கடந்த ஞாயிறன்று, போராட்டக்காரர்கள் சக்தி தனியார் பள்ளியை சூறையாடினர், பள்ளிகளுக்கு தீ வைத்தனர். மேலும் இறுதியில் அந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து தனியார் பள்ளிகள் சங்கம், பள்ளியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளிகள் திங்களன்று செயல்படாது என்று அறிவித்திருந்தனர். மேலும் இந்த அறிவிப்பு பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
Read Also This:12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களில் குளறுபடி?
ஆனால், தனியார் பள்ளிகள் சங்கத்தினர் இந்த அறிவிப்பு பெரிய தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, பள்ளி கல்வித்துறை தகவலின்படி, 89 சதவீதம் மெட்ரிக் பள்ளிகள் தமிழகத்தில் நேற்று செயல்பட்டன், அதேபோன்று, 95 சதவீதம் நர்சாி, பிரைமரி பள்ளிகள், 86 சதவீதம் சிபிஎஸ்இ பள்ளிகளும் செயல்பட்டன.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் ஒரு சில பள்ளிகள் தவிர, மற்ற பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன. தமிழ்நாட்டில் 987 பள்ளிகள் மட்டும் தாமாக விடுமுறை அறிவித்து பள்ளிகள் மூடப்பட்டன.
இந்த நிலையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம், தாமாக விடுமுறை குறித்து விளக்கம் கேட்டு, இந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பள்ளிகளின் விளக்கம் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.