Aasiriyar Manasu | ஆசிரியர் மனசு திட்டம் அமைச்சர் கூறியது என்ன?
Aasiriyar Manasu | ஆசிரியர் மனசு திட்டம்
ஆசிரியர் குறைகளை தெரிவிக்க ஆசிாியர் மனசு திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை சூலூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூாியில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற நிகழ்ச்சி நடந்தது.
அந்த நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசியது, தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. 1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களின் ஒவ்வொருவருடைய குறைகளையும் தீர்க்க வேண்டியது துறையின் கடமை. ஏராளமான விமர்சனங்கள் வருகின்றன அதை உள்வாங்கி செயல்பட வேண்டும்.
Read Also : மாணவர் மனசு திட்டம் என்றால் என்ன?
நேரடியாக களத்துக்கே சென்று பிரச்சனைகளை ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களை ஒருவருடன் ஒருவரை ஒப்பிட்டு பேச கூடாது. அதனால், மாணவர்கள் தவறான முடிவை எடுத்துவிடுகின்றனர். அவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துவதே பெற்றோர், ஆசிரியர்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் அவர் ஆசிரியர் மனசு திட்டம் குறித்து செய்தியாளிரிடம் கூறியதாவது, ஆசிரியர் பெருமக்கள் கோரிக்கை மனுவுடன் எங்களை சந்திக்க காத்துக்கொண்டிருப்பது, கும்பலோடு கும்பலாக நிற்பது, அதனை விரும்பாதவன் என்ற வகையில், அவர்களை குறைகளை போக்கும் வகையில், மாணவர் மனசு போல, ஆசிரியர் மனசு புகார் என்ற புகார் பெட்டி தனது முகாம் அலுவலகத்தில் நிறுவப்படும். அதற்கென தனி அதிகாரி நியமித்து, மனுக்களை பரிசீலித்து அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.