You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம் செய்முறை தேர்வு முழு விவரம்

10th science practical exam details in tamil

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வு தொடங்கப்பட்ட ஆண்டு 

தமிழக அரசு 2011-2012ஆம் கல்வி ஆண்டு முதல் புதிய பொதுப் பாடத்திட்டத்தினை (சமச்சீர்கல்வி) அறிமுகப்படுத்தியதால், மார்ச் 2012 முதல் அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்வு மதிப்பெண்

அறிவியல் பாடத்திட்டத்தில் கருத்தியல் தேர்விற்கு 75 மதிப்பெண்களும், செய்முறை தேர்விற்கு 25 மதிப்பெண்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்வு நேரம்

இயல் அறிவியல் (Physical Science) இயற்பியல் மற்றும் வேதியியல் 1 மணி நேரம் நடதப்படும். உயிர் அறிவியல் (Biological Science) தாவரவியல் மற்றும் விலங்கியல் தேர்வு 1 மணி நேரம் நடத்தப்படும். மொத்தம் அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு 2 மணி நேரம் நடக்கும். 

அதன்படி செய்முறை தேர்வு காலை 9 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இரு வேளைகளில் நடத்தப்படும். 

Read Also: பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வு தேதி 2025

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு வினாக்கள் 

செய்முறைக்கென பாடபுத்தகத்தில் வழங்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து மதிப்பெண்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.  

இயல் அறிவியல் 

இயற்பியல் - ஒரு வினா  - 5 மதிப்ெபண்

விலங்கியல் – ஒரு வினா – 5 மதிப்பெண் 

மொத்தம் 10 மதிப்பெண்கள்

உயிர் அறிவியலில் 

தாவரவியல் –- ஒரு வினா - 5 மதிப்பெண்

விலங்கியல் - ஒரு வினா – 5 மதிப்பெண்

         2 வினா - மொத்தம் 10 மதிப்பெண் 

எனவே மொத்தம் 20 மதிப்பெண்களுக்கு விடை அளிக்க வேண்டும். விடை அளிக்க வேண்டிய வினாக்களை மாணவர்களாகவே, செய்முறை ஆய்வு கையேட்டில் உள்ள தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். கணக்கீடு வினாக்களுக்கு ஒரு கணக்கீடு எடுத்தால் போதுமானது. 

10th practical exam internal marks in Tamil

மாணவர்கள் ஆய்வுக்கூட வருகைக்கு ஒரு மதிப்பெண், மாணவர் ஆய்வக செயல்திறன் ஒரு மதிப்பெண், மாணவர் ஆய்வக ஈடுபாடு ஒரு மதிப்பெண், ஆய்வக பதிவுக் குறிப்பேடு இரண்டு மதிப்பெண் என மொத்தம் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சிக்கான குறைந்த பட்ச மதிப்பெண்கள் – கருத்தியலில் 75 மதிப்பெண்களில் 20 மதிப்பெண்களும் மற்றும் செய்முறை தேர்வில் 25 மதிப்பெண்களில் 15 மதிப்பெண்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு விலக்கு 

மாற்றுத்திறனாளி மாணவர்கள் விருப்பப்படின், செய்முறை தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கோரி சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் கடிதம் சமர்ப்பித்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம். விலக்கு கோரும் தேர்வர்களின் கோரிக்கைக் கடிதங்களை பெற்று சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலரிடம் ஒப்படைக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.