திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக்?
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நாளை நடைபெறும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான வினாத்தாள் வெளியாகி உள்ளதாக தொலைக்காட்சி சற்று முன் செய்திகள் வெளியாகி உள்ளளது.
நாளை நடைபெறும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கான அறிவியல் வினாத்தாளும், 12ம் வகுப்பிற்கான கணித தேர்வு வினாத்தாளும் கசிந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Also Read This :பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
இந்த தேர்வு கடந்த 9ம் தேதி முதல் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் மாவட்ட அளவில் அச்சிடப்பட்டு பள்ளிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வினாத்தாள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியாகி உள்ளது செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் வெளியானது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறியதாவது, தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியாவது புதிதல்ல, ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சாட் அப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது என நினைவு கூர்ந்தனர். இது, அரசு தேர்வுகள் இயகக்கத்தின் செயல்பாடு குறை என நாங்கள் கருதுகிறோம்,
இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.