You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
ஈர நிலங்கள் என்பவை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நீரினால் மூடப்பட்ட நிலங்களாகும். இவை பல்லுயிர்ப் பராமாிப்புக்கான இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் நிலங்களாகவே காணப்படுகின்றன.ஈரநிலங்களின் முக்கியத்துவம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ம் தேதி உலக ஈர நில தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக ஈர நில தினத்தின் கருப்பொருள் ஈரநிலம் மற்றும் மனித நல்வாழ்வு என்பதாகும். சர்வதேச அளவில் முக்கியத்துவம் மிகுந்த ஈரநிலங்களை பாதுகாக்கும் நோக்குடன் 1971 பிப்ரவரி 2ம் தேதி யுனெஸ்கோவால் ஈரானில் உள்ள ராம்சார் என்னும் இடத்தில் மாநாடு நடத்தப்பட்டது. அதிலிருந்து பிப்ரவரி 2ம் தேதி உலக ஈர நில தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்களுக்கு ராம்சார் தளம் என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் 2453 பகுதிகள் ராம்சார் தளங்களாக யுனஸ்கோவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 75 ராம்சார் தளங்கள் உள்ளன. 14 ராம்சார் தளங்களை கொண்டு இந்தியாவிலேயே அதிகமான ராம்சார் தளங்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா, உயிர்கோள காப்பகம், சித்திரக்குடி, காஞ்சிரங்குளம் என மூன்று ராம்சார் தளங்களை கொண்ட ஒரே மாவட்டம் என்ற சிறப்பினை ராமநாதபுரம் மாவட்டம் பெற்றுள்ளது. இயற்கையை பாதுகாப்பதற்கான மிகச்சிறந்த நிலப்பகுதிகளாகவே ஈரநிலங்கள் காணப்படுகின்றன. ஈரநிலங்கள் உலகின் அதிக உற்பத்தி திறன் கொண்ட சற்றுச்சூழல் அமைப்பாக கருதப்படுகிறது. அவை உணவை வழங்குகின்றன, கார்பனை பிரிக்கின்றன, வெள்ளத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன, நிலத்தடி நீரை மேம்படுத்துகின்றன, ஈரநிலங்களில் வளரும் தாவரங்கள் பல்வேறு வழியில் பயன்படுகின்றன. ஈரநிலங்கள் மீன்கள், பறவைகள் போன்றவற்றிற்கும் ஏனைய நீர்வாழ் உயரினங்கள் மற்றும் பெரிய விலங்குகளுக்கும் வளம் மிகுந்த வாழ்விடத்தை அளிக்கிறது.ஈரநிலங்கள் இயற்கை நமக்கு அளித்த அருட்கொடையாகும். பல்வகை உயிரினங்களுக்கும் ஆதரமாக விளங்கும் ஈரநிலங்களை பாதுகாப்பது மனித வாழ்வுக்கு அனைத்து வகைகளிலும் பயன் தருபவையாகும். ஈரநிலங்களுக்கு பாதகமான செயல்பாடுகளை தவிர்த்து அதனை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை என உணர்ந்து செயல்படுதல் அவசியம்.
ஈரநிலங்கள் நமக்கு ஏன் முக்கியம்
நிலத்தடி நீர்பெருக்குகின்றன,இயற்கை நீர் வடிகட்டிகளாக செயல்பட்டு, மாசுக்களை அகற்றுகின்றன,வாழ்வாதரத்தை அதிகரித்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வருமானம் அளிக்கின்றன, இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்குகின்றன, புவி வெப்பமாயதலை குறைக்கின்றன,மண் அரிப்பை தடுக்கின்றன,பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ வழிவகுக்கின்றன, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் முக்கிய இடங்களாக திகழ்கின்றன, ஈரநிலங்கள் பொழுதுபோக்கு தளங்களாகவும் உள்ளன,
ஈர நிலங்கள் அழிவதால் ஏற்படும் விளைவுகள்
வெள்ளப்பெருக்கு ஏற்படுதல்,பல்லுயிர்ப்பரவல் அழிவுக்குள்ளாதல்,சதுப்புநிலத் தாவரங்கள் அழிதல்,மீன்பிடி நடவடிக்கை பாதிக்கப்படுதல்,பவளப்பாறைகள் அழிவுக்குள்ளாகும் அபாயம் உருவாதல்,மண் அமிலாமதல்,மண் உவர் நிலமாகுதல்,
ஈரநிலங்கள் பாதுகாக்கும் வழிமுறைகள்
ஈரநிலை பிரதேசத்தில் அழிவடைந்து வரும் தாவரங்களுக்கு பதிலாக மீள்நடுகை மூலம் புதிய தாவரங்களை உருவாக்க வேண்டும். கழிவுகளை ஈரநிலங்களில் கொட்டுவதனை தவிர்க்க வேண்டும். ெதாழிற்சாலைக் கழிவுகள் போன்றவற்றை ஈரநிலங்களில் சேரவிடாமல் பாதுகாக்க வேண்டும். ஈரநில நண்பர்கள் குழுவை ஏற்படுத்தி ஈரநிலங்களை பாதுகாக்க, பராமரிக்க உதவுதல், சமூக குழுக்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல். ஈர நிலங்களின் தன்மையை பார்வையிட்டு, நமக்கும், மண்ணிற்கும், மற்ற இதர உயிாினங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை புரிந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துதல். பறவைகள் மற்றும் விலங்குகளை வேட்டையாடுதலை தடுத்தல். ஈரநிலங்களுக்குள் அந்நியத் தாவரங்கள் அல்லது விலங்குகளை அறிமுகப்படுத்தாமல் இருத்தல்.