You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

World Suicide Prevention Day in Tamil | உலக தற்கொலை தடுப்பு தினம்

World Suicide Prevention Day in Tamil

உலக தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மனநலம் மற்றும் உதவித் திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், மனஉறுதியை அதிகரித்து, தற்கொலை எண்ணங்கள் தவிர்க்கவும், ஆதரவு மற்றும் மனநல சேவைகளின் அணுகலை மேம்படுத்தவும் உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்கொலை என்றால் என்ன 

தற்கொலை என்பது ஒரு நபர் தன்னுடைய வாழ்க்கையை சுயமாக முடித்து கொள்வதை குறிக்கிறது. இது மன அழுத்தம், மனநோய், தனிமை, நம்பிக்கையின்மை போன்ற உளவியல் காரணிகளால் ஏற்பட்ட முடிவாகும். தற்கொலை என்பது மிகவும் சிக்கலான சமூக மற்றும் உளவியல் பிரச்னையாகவே கருதப்படுகிறது மேலும், தடுப்பது அவசியமானது. 

தற்கொலை சார்ந்த புள்ளிவிவரங்கள் (தமிழக அளவில்)

தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணிக்கைகள் அண்மைக் காலங்களில் கவலைக்கிடமாக அதிகரித்துள்ளன. 2021ஆம் ஆண்டில் தமிழ்நாடு 18,925 தற்கொலை மரணங்களை பதிவு செய்தது. இது தென்னிந்திய மாநிலங்களில் மிக அதிகம். குறிப்பாக சென்னை மட்டும் 2,699 தற்கொலைகளை பதிவு செய்து, அதிக தற்கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்த நகரங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குடும்ப சிக்கல்கள், மனநோய், நீண்டநாள் உடல்நிலை பிரச்னைகள் ஆகியவை பெரும்பலான தற்கொலைகளின் முக்கிய காரணிகளாகும். மேலும் 2021ஆம் ஆண்டில் 33 குடும்ப தற்கொலை சம்பவங்களுடன் தமிழ்நாடு மிக அதிக எண்ணிக்கையில் கூட்டுக் குடும்ப தற்கொலைகளை பதிவு செய்துள்ளது. 

Read also: disadvantages of drugs in Tamil 

இந்த புள்ளிவிவரங்கள், மாநிலம் முழுவதும் மனநல ஆதரவு மற்றும் தற்கொலை தடுப்பு முயற்சிகளின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன. தமிழ்நாடு சுகாதாரத்துறையின் 104 தொலைபேசி சேவையும், Sneha Suicide Prevention Center போன்ற உதவி நிலையங்களும், மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றன. 

தற்கொலை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் 

தற்கொலை சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முதன்மையாக தற்கொலை செய்தவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கடுமையான மன உளைச்சல், துயரம், மற்றும் குற்ற உணர்வுகளை சந்திக்க நேரிடுகிறது. இது அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் மனநிலை சீா்குலைவிற்கு வழிவகுக்கும். தற்கொலை விழிப்புணர்வு சமுதாயத்தில் மனநல ஆதரவை பற்றிய அக்கறையை அதிகரிக்கிறது. மேலும் மனநல குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வு உருவாக்கிறது. மேலும் சமூகத்தில் மனநலத்திற்கான ஆதரவை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு தூண்டுகோலாக இருக்கும். 

தற்கொலை உளவியல் காரணிகள் 

மன அழுத்தம் மற்றும் மன நோய் தற்கொலைக்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன. மன அழுத்தம் என்பது வாழ்க்கையின் சவால்கள், வேலைப்பளு, பொருளாதார சிக்கல்கள், குடும்ப பிரச்னைகள் போன்றவற்றால் உண்டாகும் உளவியல் நிலை. இது நீடித்தால் மனநல பிரச்னைகளாக மாறி, நபரின் மன நிலையை பாதிக்கக்கூடும்.

மனநோய் என்பது ஆழ்ந்த மன உளைச்சலால் தொடங்கும் ஒரு சரிசெய்யாத மன நிலையாகும். இதில் முதன்மையான மனசோர்வு (Depression) பயம் (Anxiety Disorders) மற்றும் இருநிலை உணர்ச்சி கோளாறு (Bipolar Disorder) போன்றவை அடங்கும். இந்தநோய்கள் மனநிலையில் உள்ள வெற்றிடத்தை அதிகரித்து, தற்கொலை முயற்சிக்கு வழிவகுக்ககூடும். உடல்நிலை பிரச்னைகள் கூட, நீண்டநாள் வேதனை, அல்லது சிகிச்சை பெற முடியாத நோய்களால், தற்கொலை எண்ணங்களை தூண்டிவிடக்கூடும். 

குடும்ப மற்றும் சமூக ஒடுக்குமுறை, தனிமை

வறுமை மற்றும் பணம் தொடர்பான பிரச்னைகள் தற்கொலைக்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. வறுமை நபர்களின் வாழ்க்கை தரத்தை பாதிக்கிறது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது. பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள், கடன் சுமைகள் மற்றும் வேலை இழப்பு போன்றவை மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. இதனால் நம்பிக்கையின்மை, நெருக்கடி மற்றும் எண்ணங்களை தூண்டுவதற்கான ஆபத்து உருவாகிறது. குறிப்பான நிலைமைய எதிர்கொள்ள முடியாத அளவுக்கு மனிதர்கள் தள்ளப்படும்போது.

மரபியல்

மரபு சார்ந்த காரணிகள்கூட தற்கொலை எண்ணத்தை உயர்த்தக்கூடும். மரபியல் தொடர்பான மனநோய்கள் அல்லது மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறனில் உள்ள குறைபாடுகள் சில குடும்பங்களில் மரபியல் ரீதியாக கடத்தப்படலாம். இதுவே, தற்கொலை சிந்தனைகள் அல்லது செயல்களுக்கான பின்புலமாக இருக்கும். 

தற்கொலைக்கான அறிகுறிகள்

மனோபாகம்: எப்போதும் சோகமாகவோ அல்லது கவலையாகவோ உள்ளதாக கூறுதல்,

பேசுவதை குறைத்தல்: தன்னுடைய வாழ்க்கை, எதிா்காலம் அல்லது உறவுகளை பற்றிய கருத்துகளை குறைத்தல்

ஆரோக்கிய குறைவு: உணவு, தூக்கம் அல்லது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாமல் இருப்பது.

மாறுபட்ட ஆடைகள்: ஆடைகளில் முக்கியத்துவம் இல்லாமல் இருத்தல்

எதிர்சிந்தனை: எப்போதும் தோல்வியடைய வேண்டும் என்று நினைத்தல்

இறப்பை சிந்தித்தல்: தற்கொலை செய்யும் எண்ணங்கள் அல்லது திட்டங்களை சொல்லுதல், எழுதுதல், வரைதல் 

அதிகமாக அருந்துதல்: மது அல்லது மற்ற உள்கொல்லா மருந்துகளை பயன்படுத்துவது

விலகுதல்: முக்கியமான உறவுகளை விட்டு விலகுதல் அல்லது தனிமையை விரும்புதல்

தற்கொலை தடுப்பு சமூக உளவியல் அணுகுமுறைகள்

அறிவியல் ஆதாரங்கள்: தற்கொலை பற்றிய சமீபத்திய ஆராய்ச்சிகளை பயன்படுத்தி, நம்பிக்கையுள்ள உளவியல் முறைகளை பின்பற்றுதல் 

உணர்வுபடிதலின் முன்னுாிமை: மனநலச்சிக்கல்களை, உடல்நலச்சிக்கல்களை கவனிப்பது, மற்றும் தீர்வுகளை கண்டுபிடிக்க உதவுதல்

கண்காணிப்பு: தற்கொலை காரணங்களை பகுப்பாய்வு செய்து, மாற்றுக்குழுவினரின் மூலம் கண்காணிப்பு மற்றும் தீர்வுகளை கண்டறிதல் 

உதவி அமைப்புகளை உருவாக்குதல்: ஆதரவு குழுக்கள், ஆதரவு குழுவினர்கள் மற்றும் சமூக ஆதரவு தரும் நபர்களை தொடர்பில் கொள்ள உதவுதல்

உளவியல் உத்திகள்: தற்கொலை முயற்சி செய்பவர்களுக்கு உளவியல் உத்திகளை பயன்படுத்தி சிகிச்சை அளித்தல்

மனநல மேலாண்மை: தூக்கம், உணவு, உடற்பயிற்சி மற்றும் மனநலப் பராமரிப்பு சார்ந்த கொள்கைகளை பின்பற்றுதல்

அர்த்தமுள்ள உறவுகள்: குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் உறவுகளை மேம்படுத்துதல்

அறிவுறுத்தல் மற்றும் கல்வி: தற்கொலை தடுப்பு தொடர்பான தகவல்களை வழங்குதல் மற்றும் அறிவுசார் சுகாதாரத்தை கல்வியை பின்பற்ற வைத்தல்

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வின் முக்கியம்

 

சமூக விழிப்பணர்வு 

தற்கொலைக்கு எதிரான சமூக விழிப்புணர்வு, மனநலச் சிக்கல்களை வெளிப்படுத்த, ஆதரவான சூழலை உருவாக்க, தற்கொலைக்கு முயல்பவரின் முன் அறிகுறிகளை அடையாளம் காணவும், உடனடியாக உதவவும், சமூக நலனை மேம்படுத்தவும் சமூக விழிப்புணர்வு அவசியமாகிறது. 

கல்வி நிலையங்களில் மற்றும் பணிபுரியும் இடங்களில் தற்கொலை தடுப்பு ஆலோசனை மையங்கள் 

பள்ளி, கல்லூரி மற்றும் பணிபுரியும் இடங்களில் தற்கொலை தடுப்பு ஆலோசனை மையங்கள், மனநல பராமரிப்பு திட்டங்களை உருவாக்குதல், ஆதரவு குழுக்கள் அமைத்தல், மன அழுத்தம் குறைவதற்கான வழிகாட்டல்களை வழங்குதல் மற்றும் தற்கொலை அறிகுறிகளை அடையாளம் காண வழிமுறைகளை உருவாக்கும் மையம் ஏற்படுத்த வேண்டும். 

தற்கொலை விழிப்புணர்வுக்கான அரசின் நடவடிக்கைகள் 

மனநலம் தொடர்பான பயன்பாட்டு திட்டங்கள்: அரசு மனநலப் பராமரிப்பு திட்டங்களை செயல்படுத்தி, பொதுமக்களுக்கு பணி, பயிற்சி மற்றும் ஆதரவு வழங்குதல்

வார்டுகளை முன்னிறுத்தல்: தற்கொலைக்கு ஆளுாகும் நபர்களுக்கு மன அழுத்தம் மேலாண்மை தொடர்பான ஆலோசனைகளை வழங்கி சிறப்பு வார்டுகள் அமைத்து, நேரடி உதவி வழங்குதல்

உதவி கோரிக்கை மையங்கள்: தேசிய மற்றும் மாநில அளவில் உதவி மையங்கள் உருவாக்கி, 24 மணி நேரமும் ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்குதல்.

தகவல் அளிக்கும் முறை: தற்கொலை முயற்சிகளை பற்றி தகவல் அளிக்க கைப்பேசி செயலி மற்றும் இணையதளங்களை உருவாக்கி எளிதாக்க புகாரளிக்க வழங்குதல் 

அரசியல் விழிப்புணர்வு: தற்கொைல தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் கல்வி திட்டங்களை அரசியல் அதிகாரத்தின் மூலம் மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்டுத்துதல் 

ஆய்வு: தற்கொலைக்கான காரணங்களை புரிந்து அதை சரிசெய்ய அரசு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வெளியிடுதல்

மனநல பராமரிப்பு: மருத்துவ பணியாளர்கள் மற்றும் உளவியலாளர் பயிற்சி மூலம் மனநல பராமரிப்புகளை மேம்படுத்துதல்

வாழ்க்கை திறன் மேம்பாடு: தற்கொலை முயற்சி செய்பவரின் வாழ்க்கை திறன்களை பெருக்கம் பயிற்சியினை வழங்குதல் 

நிர்வாக ஒழுங்குகள்: தற்கொலைக்கான நிபுணர் குழுக்கள் அமைத்து, பொதுநலன் மற்றும் தீர்வுகளை வழங்குதலுக்கான ஆலோசனை மற்றும் சட்டங்களை உருவாக்குதல் 

தற்கொலை தடுப்பிற்கான உளவியல் சிகிச்சை முறைகள் 

மனநல ஆலோசனை: உளவியல் நிபுணர்கள் மூலம் மன நிலையை மதிப்பீடு செய்து சரியான ஆலோசனைகள் வழங்கி தீர்வு காணுதல்

சிகிச்சைகள்: (Cognitive Behavioral Therapy /CBT) மனமாற்றங்கள் மற்றும் செயல்முறைகளை மாற்றுவதற்கான உளவியல் சிகிச்சை, நோய்க்காரணிகளை தவிர்க்க உதவுகிறது.      

உணர்வு மூலம் கையாளுதல்: (Dialectical Behavior Therapy / DBT) மூலக்காரண அனுபவங்களை சமாளிக்க, மன அழுத்தத்தை குறைக்க மற்றும் உணர்வுகளை ஒழங்குப்படுத்த உதவுகிறது.  

திறன் பயிற்சிகள்: (Interpersonal Therapy / IPT) உறவுகளை மேம்படுத்த மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் அவசியம்

மனநல நிலைத்தன்மை திட்டங்கள்: சுயநல கவனிப்பு, தூக்கம் மற்றும் உணவு பழக்கங்களை மேம்படுத்தும் திட்டங்கள்

மருந்துகள்: மனநல சிக்கலை பராமரிக்க குறிப்பாக மிகுந்த மன அழுத்தம் மற்றும் அவசர நிலைகளை பாிசிலிக்கும் மருத்துவ ஆலோசனைகள் 

மனநல குழுக்கள்: குழு செயல்பாடு மற்றும் குழு ஆதரவு பெறுவதற்கான வாய்ப்புகள்

ஈடுபடுத்தும் பயிற்சிகள்: (Problem solving Therapy / PST) பிரச்சனைகளை தீர்க்க மற்றும் எதிர்கால யோசனைகள் நிர்வகிக்க உதவுதல் 

மனநல சிகிச்சை மையங்கள்: சிகிச்சை மற்றும் ஆதரவு வழங்கும் மையங்களை ஏற்படுத்துதல் வேண்டும் 

முடிவுரை

மனநலக் குறைபாடுகளே மற்றும் தற்கொலை முயற்சிகளை தடுப்பதில் கல்விக் கூடங்கள் முக்கிய பங்கை வகிக்க வேண்டும். இதற்காக பள்ளிகளில் உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும், இதுபோன்ற திட்டங்கள் மாணவர்கள் மனநலனை மேம்படுத்தும். மேலும், உளவியல் பாடத்தை கட்டாயப் பாடமாக்குவதன் மூலம் மாணவர்களுக்கு மனநல பாதுகாப்பு மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்க தேவையான அறிவையும், திறனையும் வழங்க முடியும். மேலும், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வழிகாட்டுவதாக அமையும். 

இலவச உதவி மையம்

சினேகா தற்கொலை தடுப்பு மையம் – 91 44 2464 0050

Tele Manas 14416 or 1-800-891-4416

Health Help Line 107

நன்றி

முனைவர் க பாலமுருகன், 

உதவிப் பேராசிரியர், உளவியல்துறை,

பெரியார் அரசு கலைக்கல்லூரி, கடலூா்.