அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் தொழில்முனைவோர் மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை என்ற தலைப்பில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சிறு, குறு, மைக்ரோ தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், தொழில் தொடங்குதல், அரசின் ஆதரவுத்திட்டங்கள், சந்தை வாய்ப்புகள் மற்றும் எதிர்நிலைகள் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.மாணவர்கள் அனைத்து துறைகளிலிருந்தும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொண்டதோடு, வியாபாரம் தொடங்குதல், வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் நிதி ஆதரவுகள் குறித்து கேள்விகளை எழுப்பி, தகவல்களைப் பெற்றனர்.கோயம்புத்தூர் டவுன் ரோட்டரி கிளப் தலைவர் ரோட்டேரியன் எம்டி விவேகானந்தன், மேலாண்மை இயக்குநர், கல்பனா குழுமம் பாலமுருகன், உதவி பேராசிரியர், பிரபாகரன், மாவட்ட திட்ட மேலாளர், EDII, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன் தலைவர் செந்தில் மற்றும் செயலாளர் பிரபு, கல்லூரியின் முதல்வர் ஜே நளதம் மற்றும் எஸ் பாலமுருகன் துறைத்தலைவர், சர்வதேச வணிகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த பயிற்சியை இந்திராணி, ரம்யா மற்றும் ரிதன்யா ஆகியோர் ஏற்பாடு செய்தனர்