womens day in tamil 2024
முன்னுரை
புதுமைப் பெண்களை உருவாக்கவும், பெண் என்றால் தாழ்வு என்ற எண்ணம் மறையவும், பாரதி தனது படைப்புகளில் தடம் பதித்தான். ஆடவன் செய்கிற அனைத்து பணிகளையும் பூவையர் செய்ய வேண்டும் என்ற அவரது அவா இன்று நிறைவேறியிருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களுக்கான பெண்கள் தினம் உருவான விதம் சார்ந்து இக்கட்டுரையில் காண்போம்.
பொருளுரை
முதன் முதலில் அனைத்த நாடுகளில் உள்ள தொழில் செய்யும் பெண்கள் நடத்திய மாநாட்டில் பெண்கள் தினம் இனி அனுசரிப்பது என்று முடிவானது. கிளாரா செட்கின் என்ற ஜெர்மன் பெண்மனி சொன்ன யோசனை, இது நடந்த ஆண்டு 1911, மார்ச் 8. அதன்படி உலகில் உள்ள பெண்கள் அனைவரும் தங்கள் ஒருமைப்பாட்டை காண்பிக்கும் பொருட்டு, அந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2011ல் இது நூற்றாண்டு கண்டது. பெண்கள் தினம் சீனா, ரஷ்யா, வியட்நாம், பல்கோரிய போன்ற பல்வேறு நாடுகளில் விடுமுறை தினமாக அந்நாடுகள் அறிவித்துள்ளது. 1896ல் ஆங்கில எம்.பி ஜான் ஸ்டூவர்ட் என்பவர் தான் முதன்முதலில் பெண்களுக்கு ஒட்டுாிமை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துவைத்தார். 1983 செப்டம்பர் 19ல் நியூசிலாந்து நாடுதான் முதன்முதலாக ெபண்களுக்கு ஒட்டுரிமை அளித்தது. மற்ற நாடுகளில் பெண்கள் இரண்டாந்தர குடிமக்களாகவே கருதப்பட்டு வந்திருக்கின்றனா்.
1910ல் கோபன் ஹேகன் நகரில் இரண்டாவது அனைத்துலக பெண்கள் மாநாடு நடந்தது. அதில்தான் மேற்ெசான்ன பெண்கள் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுவது என்று ஒருமனதாகத் தீா்மானிக்கப்பட்டது. 1911இல் கிளாரா செட்கின் மார்ச் மாதம் 19ம் தேதி இரண்டாம் மகளிர் உலக மாநாட்டை நடத்தினார். வாய் வார்த்தையின் மூலமே செய்தி பரப்பப்பட்டது. அந்நாடுகளுக்கு முந்தைய வாரத்தில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்பட்டன.
பத்திரிகைகள் மகளிரும் பாராளுமன்றமும் வீட்டில் உள்ள மகளிருக்கும் அரசியலுக்கும் தொடர்பு என்ன?, பெண்ணுரிமை என்ற தலைப்புகளில் விளக்கமாக வெளியிடப்பட்டது. மாற்றத்திற்காக ஆண்கள் வீட்டில் தங்கி பெண்களை அத்தகைய மாநாட்டிற்கு அனுப்பினார். சுமார் 30 ஆயிரம் பேர் திரண்டனர். ஆரவாரம் ஒடுக்கப்பட அரசு எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 1913இல் மீண்டும் மார்ச் 8ஆம் நாள் மகளிர் தினம் கொண்டாட தீர்மானிக்கப்பட்டு இப்பொழுதும் நடைமுறையில் உள்ளது.
1975ல் ஐக்கிய நாடுகள் சபை உலக மகளிர் தினம் இனி அந்நாளில் கொண்டாட தீர்மானித்தது. பெண்கள் இயக்கங்கள் அங்கீகரிகப்பட்டு பல்வேறு அரசுகள் பெண்கள் தின நிகழ்ச்சிகளை தாங்களே நடத்துவதென தீர்மானித்தன. உலகின் பல்வேறு நாடுகளில் இத்தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் நாடாளுமன்றங்களிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெரிதும் பங்கு பெற தொடங்கிவிட்டனர். பல்வேறு துறைகளில் பெண்கள் தங்கள் திறமைகாட்டி சாதித்து வருகின்றனர். ஜெர்மனியின் தலைவர் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கொக்கோ கோலா போன்ற கம்பெனிகளில் பூவையர்களே பொறுப்பு வகிக்கிறார்கள். நம் நாட்டின் ஜனாதிபதி, நிதியமைச்சர், மாநில முதல்வர் போன்றவர்களே பெண்கள், அவர்கள் திறமையை உலகமே கொண்டாடி வருகிறது.
மார்ச 8ம் நாள் நம் நாட்டிலும் பல்வேறு நிலைகளில் இத்தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான குழுமம் பெண்கள் ஆண்களை போன்ற சம உரிமை பெற்றவர்களாக பணியாற்றும்போது உலகில் அமைதியும், நிலைத்த தன்மை பெற முடியும் என்கிறது, இப்போதும் பெண்கள் வறுமைக்கும், பாகுபாட்டிற்கும் உட்படுத்துவதால்தான் ஐ.நா.வின் குறிக்கோள்கள் நிறைவேற்றப்பட முடியாமல் நிலைத்தன்மையற்றிருக்கிறது என்றகிறது, ஐ.நா. அமொிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கிளிண்டன், மனித உரிமை பெண்ணுரிமையே, பெண் உரிமையே மனித உரிமை என்கிறார். உலக வங்கி ெவளியிட்ட அறிக்கை ஒன்றில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நல திட்டங்களில் உள்ள பாகுபாடுகளை குறிப்பிடுகிறத. இன்னமும் தங்கள் பணி இடங்களில், வங்கிகளில், விவசாய பண்ணைகளில் பெண்கள், ஆண்களை விட பின்தங்கியே இருக்கின்றனர். பெண்கள் ஆண்களை விட 22சதவீதம் குறைவான கூலியையும், ஊதியத்தையும் பெறுகின்றனர்.
தொழில் மேன்மை பெற்ற நாடுகளை விட வளரும் நாடுகளில் உள்ள பெண்களுக்கு மகப்பேற்றின் போது ஏற்படும் மரணங்கள் அதிகம் என கூறப்படுகிறது. உலக பொருளாதார முன்ேனற்றத்திற்கு அரசியல் நிலைத்தன்மைக்கு ஆண், பெண் இருபாலரின் வளத்திற்கு பெண்கள், குழந்தைகள் வாழ்க்கையில் மூலதனம் வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் வல்லுநா்கள்.
முடிவுரை
பெண் என்றால் தாழ்வு இல்லை எனவும் ஆண்களுக்கு நிகராக செய்ய முடியும் என்ற நிலை வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. சம உரிமை பெண்களுக்கு வழங்குவோம், பெண் சமுதாயம் உயர அனைவரும் வழி அமைப்போம்.