பள்ளி கல்வித்துறை இயக்குனராக அறிவொளி கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் இன்று மாலையுடன் பணி நிறைவு பெற்றார். இதற்கிடையில், பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், பள்ளி கல்வித்துறை இயக்குனராக ச கண்ணப்பன் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தொடக்க கல்வி இயக்குனராக பணியாற்றி வந்த ச கண்ணப்பன், தற்போது பள்ளி கல்வி இயக்குனராக பணியிட மாறுதல் பெற்றுள்ளார். இதேபோல், அரசு தேர்வுகள் இயக்குனராக பணியாற்றி வந்த, சேதுராமவர்மா, தொடக்க கல்வி இயக்குனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் இயக்குனர் ந லதா, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.