பள்ளி மேம்பாட்டு திட்டம் என்றால் என்ன?|What is the School Development Plan?
பள்ளி என்பது, ஒரு மாதிரி சமுதாயம் ஆகும். சமூகத்துடன் இணைந்து, சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முதன்மையிடமாக விளங்கக்கூடிய பள்ளியை மேம்படுத்த திட்டம் தீட்டுதல் - School Development Plan என்பது அவசியம்.
ஒரு பள்ளியை அனைத்து அம்சங்களிலும் தன்னிறைவு பெற்ற பள்ளியாக மாற்றவேண்டுமானால், அதற்கான தேவைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்குதல் இன்றியமையாததாகும்.
READ ALSO: தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கைகள் 2021
பள்ளி மேம்பாட்டு திட்டம் சிறப்புக் கூறுகள் என்ன?
1. ஒவ்வொரு கல்வியாண்டிலும் வகுப்புவாரியாகப் பள்ளியில் படிக்கும் மாணாக்கர் எண்ணிக்கையை அறிதல்.
2. முன்கூட்டியே தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் ஏற்படுத்துதல்.
3. ஆண்டு வாரியாக அடுத்த மூன்றாண்டுகளுக்குத் தேவையான கூடுதல் நிதி ஆதாரங்களுக்குத் திட்டமிடல்.
பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரிப்பது எப்படி
1. ஒவ்வோரு ஆண்டிற்கும் வகுப்புவாரியான பள்ளிச்சேர்க்கை பற்றிய திட்டம் வகுத்தல்.
2. 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புவரைக்கும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரைக்கும் தேவைப்படும் கூடுதல் ஆசிரியர்கள், தலைமையாசிரியர், பாட ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர் விவரங்களைத் தனித்தனியாகப் பட்டியலிடுதல்.
3. ஒரு பள்ளியில் இருக்கவேண்டிய நடைமுறைத் தரங்களின்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான கூடுதல் கட்டடங்கள், உபகரணங்கள் ஆகியவற்றின் விவரங்களைத் திரட்டுதல்.
4. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டுவாரியாகப் பள்ளிச்சேர்க்கை பற்றிய திட்டம், தேவைப்படும் ஆசிரியர்கள், பள்ளித் தேவைகள், சிறப்புப் பயிற்சிகள், ஆகியவற்றிக்குத் தேவையான நிதியைத் திட்டமிடல்.
5. தற்போது இருக்கிற உள்கட்டுமான வசதிகள், கட்டடங்கள், ஆய்வகம், நூலகம், கழிப்பறைகள், குடிநீர், விளையாட்டுத்திடல் மற்றும் இருக்கைகள் உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்குத் தேவைப்படும் நிதி குறித்துத் திட்டமிடல்.
6. இந்தத் திட்டம் நிதியாண்டு முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னால் தயார் செய்யப்பட வேண்டும்.
7. பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தில் குழுவின் தலைவர், துணைத் தலைவர், வழி நடத்துநர் ஆகியோர் கையொப்பமிட்டு உள்ளூர் அதிகார மையத்திடம் நிதியாண்டு இறுதிக்குள் ஒப்படைக்கவேண்டும்.
பள்ளி மேம்பாட்டு திட்டம் படிவம் PDF