இந்த பதிவில் நாம், ஒரு மழலையர் பள்ளியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமிக்கும் முன்பு, பள்ளி தாளாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து காண்போம்.
What is Qualifications of Teaching staff in Primary School
மழலையர் பள்ளி 2015 திருத்தப்பட்ட விதியில், மழலையர் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கூறுகிறது. அதாவது 15 மாணவனுக்கு ஒரு ஆசிரியர் வீதம் என்ற அடிப்படையில், ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும்.
தகுதிவாய்ந்த பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்த பட்ச கல்வித்தகுதியாக பன்னிரென்டாம் வகுப்பு முடித்து, கூடுதலாக, பட்டயப்படிப்புகளான D.T.Ed /D.E.Ed/ Home Science or Degree in Home Science or Certificate அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும்.
குற்ற பின்னணியில் உள்ளவர்கள் யாரும் பணிக்கு அமர்த்தக்கூடாது. மேலும், ஆரோக்கியமான உடல்நலம் கொண்ட ஆசிரியர்கள் மட்டும் பள்ளியில் நியமிக்க வேண்டும். குறிப்பாக, அவர்கள் மருத்துவ துறையிடம் சான்றிதழ் பெற்று பள்ளிகளில் கட்டாயம் சமர்ப்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What is Qualifications of Non - Teaching staff in Primary School
இந்த ஆசிரியரல்லாத பணிகளிலும், போதுமான பணியாளர்கள் நியமிக்க வேண்டும் பள்ளி கல்வித்துறை விதிகள் கூறுகிறது.
குழந்தைகளை கவனிக்க, குழந்தை கவனிப்பாளர்கள் உதவியாளர்கள் நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை கவனிப்பாளர்கள், உதவியாளர்கள் மிகுந்த அனுபவத்துடன் குழந்தைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.
Termination of Teaching and Non - Teaching Staff in play schools
மழலையர் பள்ளி தாளாளர்கள் ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நீக்க அதிகாரம் படைத்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக புகார் அடிப்படையில்.
வேண்டுமென்றே அலட்சியமாக பள்ளிகளில் செயல்படுதல், குழந்தைகளை துன்புறுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால், உடனடியாக பள்ளிகளில் இருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேரும் பணியாளர்கள் ஒப்பந்த காலம் நிறைவடைந்தால், பள்ளியின் முடிவுக்கு ஏற்ப, அவர்களை பணியிலிருந்து நீக்கலாம் அல்லது பணியில் தொடரலாம் என இந்த விதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுபோன்ற கல்வி தகவலை அறிந்துகொள்ள, நமது இணையத்தை மறக்காமல் Subscribe பட்டானை அழுத்திக்கொள்ளவும்.