எட்டாம் வகுப்பு பொது தேர்வு கட்டணம் எவ்வளவு? What is The Eighth Standard Public Examination ESLC Fee?
சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கம் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படும். இதனை ஆங்கிலத்தில் Eighth Standard Public Examination ESLC என்று அழைக்கப்படும்.
தனித்தேர்வர்கள் வி்ண்ணப்பித்து அனைத்து பாடங்களையும் எழுதலாம் அல்லது ஏதாவது குறிப்பிட்ட பாடத்தில் தோல்வியுற்றால், அந்த தேர்வினை எழுதலாம் என விதி உள்ளது.
READ ALSO: பள்ளி புலப்பெயர்ச்சி சான்றிதழ் பெறுவது எப்படி ?
எட்டாம் வகுப்பு பொது தேர்வு கட்டணம் எவ்வளவு?
Eighth Standard Public Examination ESLC Fee
அரசு தேர்வுகள் இயக்ககம் எட்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான கட்டணம் என நிர்ணயித்துள்ளது. இதில் தேர்வு கட்டணம், பதிவுக்கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், சேவை கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணம் என ஐந்து வகையான கட்டணங்கள் பெறப்படுகின்றன.
இதில் தேர்வு கட்டணமாக ரூ. 100 வசூல் செய்யப்படுகிறது.
பதிவு கட்டணம் என ரூ 10 வசூல் செய்யப்படுகிறது
மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் என ரூ.10 வசூல் செய்யப்படுகிறது
சேவை கட்டணம் என ரூ 5 வசூல் செய்யப்படுகிறது
ஆன்லைன் பதிவு கட்டணம் என ரூ. 50 வசூல் செய்யப்படுகிறது
மொத்தம் ஒரு தனித்தேர்வர்கள் ரூ. 175 செலுத்த வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தொிவித்துள்ளது
இதுதவிர தட்கல் கட்டணம் என ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தட்கலில் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் தட்கல் ரூ 500 மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ 175 என சேர்த்து கட்டணமாக கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.