Wall Painting in government Schools | சுவர் சித்திரங்கள் வரைய 640 பள்ளிகள் தேர்வு
Wall Painting in government Schools
ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் (சமக்ரா சிக்ஷா) குறிக்கோள் மற்றும் செயல்பாடுகளின்படி குழந்தைகளின் கல்வி உரிமை, பெண்கல்வி, பெண் குழந்தை பாதுகாப்பு, தன்சுத்தம், சுகதாரம் சார்ந்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே சுவர் சித்திரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதையடுத்து சுவர் சித்திரம் வரைய மாவட்டத்திற்கு 20 பள்ளிகள் வீதம் (தொடக்க, நடுநிலை - 10, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி -10) மாநிலம் முழுவதும் 640 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஒரு பள்ளியில் பத்து சுவர் சித்திரங்கள் வரையப்பட உள்ளது. மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள செயல்முறை கீழே இணைக்கப்பட்டுள்ளது.