You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Vocational Stream Students Should Be Admitted in the Private Agriculture Colleges - High Court Direction

AGRI VOCATIONAL STREAM JUDGEMENT COPY

Vocational Stream Students Should Be Admitted in the Private Agriculture Colleges - High Court Direction தொழிற்பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கும் தனியார் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு -


திருப்பூர் மாவட்டம் காங்கயத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் மூ.த.இனியன்.  இவர் 2018 – 2019 கல்வியாண்டில் மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் +1, +2 வகுப்பில் வேளாண்மைச் செயல்பாடுகள் தொழிற்பாடப் பிரிவில் படித்து தேர்வானார்.

பின்னர், 2019 – 2020 கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண்மைக் கல்லூரியில் இளம் அறிவியல் வேளாண்மைப்  பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்ற 27 தனியார் வேளாண்மைக் கல்லூரிகளில் +1, +2 வகுப்பில் வேளாண்மைச் செயல்பாடுகள் தொழிற்பாடப் பிரிவில் படித்த மாணவர்கள் சேர்வதற்கு தகுதியில்லை என்று பல்கலைக் கழகத்தின் சேர்க்கை விதிமுறை இருந்தது.   

மேலும் வேளாண்மைப் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் பத்துப் பட்டப்படிப்புகள் உள்ளன. ஆனால், தொழிற்பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு நான்கு பட்டப்படிப்புகளில் ஐந்து விழுக்காடு இடங்களை மட்டுமே பல்கலைக் கழகம் ஒதுக்கியிருந்தது. அதாவது மொத்தம் இருந்த 3905 இடங்களில் தொழிற்பாடப் பிரிவு மாணவர்களுக்கு 47 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் +1, +2 வகுப்பில் வேளாண்மைச் செயல்பாடுகள் தொழிற்பாடப் பிரிவில் படித்த மாணவர்களின் கல்வி உரிமையை பாதிக்கும் வகையில் இருந்த தமிழ்நாடு அரசின்  வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சேர்க்கை விதிமுறைகளை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் இனியன்  வழக்குத் தொடர்ந்தார்.

இவரது சார்பாக மூத்த வழக்குறிஞர் பி.வி.எஸ். கிரிதர் வழக்கை நடத்திவந்த நிலையில் 21-09-2021 அன்று இவ்வழக்கில் நீதியரசர் என். ஆனந்த் வெங்கடேஸ் தீர்ப்பளித்தார்.

அதில்,

வேளாண் பல்கலைக் கழகத்திற்கு பதினெட்டு உறுப்புக் கல்லூரிகளும் பல்கலைக் கழகத்துடன் இணைப்புப் பெற்ற  28 தனியார் கல்லூரிகளும் உள்ளன. தொழிற்ப்பாடப் பிரிவினருக்கு ஐந்து விழுக்காடு இட ஒதுக்கீடு  பல்கலைக் கழகத்தின்  உறுப்புக் கல்லூரிகளான 18 கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்ற கட்டுப்பாடு அரசாணையில் குறிப்பிடப்படவில்லை.

ஆகவே, அரசாணையில் குறிப்பிட்டுள்ள ஐந்து விழுக்காடு இடங்கள் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள்  மற்றும் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக்  கல்லூரிகள் அனைத்துக்கும் பொருந்தும் என்பதைத் தெளிவாக்குகிறோம்.

அடுத்த கல்வியாண்டில் இருந்து பல்கலைக் கழகம் இதைக் கருத்தில் கொள்ள  வேண்டும். மேலும்,  பொதுப் பாடப் பிரிவில் படிக்குக் மாணவர்கள் பொதுச் சேர்க்கை மற்றும்  இட ஒதுக்கீடு இரண்டு வகைகளிலும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பத்துப் பட்டப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில் தொழிற்பாடப் பிரிவில் படித்த மாணவர்களுக்கு நான்கு பட்டப் படிப்புகளில் அதே போன்ற வாய்ப்பைத் தராமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

புது அரசாணையை வெளியிடும்போது  தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறைச் செயலாளர் இதைக் கருத்தில் கொள்ளவேண்டும். 13.08.1984 தேதியிட்ட அரசாணை  எண்.1312 நடப்பில் இருப்பின், தொழிற்ப்பாடப் பிரிவு மாணவர்களுக்கு ஐந்து விழுக்காட்டு ஒதுக்கீடு பல்கலைக் கழகத்தின் இரண்டு வகைப்பட்ட கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படவேண்டும்.

ஆனால், அடுத்தடுத்த முன்னேற்றங்கள் மற்றும்  நீதிமன்றத்தால்  முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இளம் அறிவியல் வேளாண்மை, இளம் அறிவியல் தோட்டக் கலை, இளம் அறிவியல் வனவியல், இளம் தொழில்நுட்பம் வேளாண் பொறியியல் ஆகிய நான்கு பட்டப்படிப்புகளில் தொழிற்பாடப் பிரிவு மாணவர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்குவதற்கு புதிய அரசாணையை தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறைச் செயலாளர் வெளியிடுவதற்குத் தடையில்லை. 


நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மேற்கண்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. நீதிமன்றத்தின் பரிந்துரைகளை ஏற்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சேர்க்கை விதிகளில் உரிய திருத்தங்களைச் செய்து  தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டால் 250 க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு வேளாண்மைப் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு நியாயமான வாய்ப்புகள் கிடைக்கும். 

தொடர்புக்கு -சு.மூர்த்தி.
9965128135.