Virus Fever School Holiday | வைரஸ் காய்ச்சல் பள்ளிகள் விடுமுறை
Virus Fever School Holiday
வைரஸ் காய்ச்சல் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மார்ச் 16ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை வரும் 16ம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியரில் புதிய வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகையான வைரஸ் இன்புளுயன்சா ஏ வைரஸின் துணை வைரஸான எச்3என்2 என்று அழைக்கப்படுகிறது.
இந்தி புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைதான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் மத்தியில் எழுந்தை தொடர்ந்து, புதுவை சட்டப்பேரவையில் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டார். அதில், புதுச்சேரியில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றளர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் ஆரம்ப பள்ளி முதல் 8ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவிபெறும் மற்றம் தனியார் பள்ளிகள் வரும் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது, என்று அறிவித்தார்.