Virudhunagar latest education news | சங்கத்திற்கு சவால்விட்ட கல்வி அதிகாரி
Virudhunagar latest education news
விருதுநகர் மாவட்ட தொடக் கல்வியில் ஆசிரியர் சங்கத்திற்கும், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) இடையே முட்டல், மோதல் சம்பவம் அரங்கேறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் அசோக்குமார் நேற்று வட்டார கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை தொடர்பான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் முன்னர் காவல்துறை மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரிடம் (தொடக்க கல்வி) உரிய அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும் என அனைத்து வகை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு தெரிவிக்குமாறு வட்டார கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Read also: நிதியை சுருட்டும் வட்டார கல்வி அலுவலர்கள்
இந்த சுற்றறிக்கை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ஒரு ஆசிரியர் போட்ட வாட்ஸப் பதிவில், கல்வி நலன்,மாணவர் நலன்,
ஆசிரியர் நலன் சார்ந்து போராடுவதற்கு,உரிமைகளை மீட்டு எடுப்பதற்கே சங்கங்கள் உள்ளன.
போராட்டம் நடத்துவதற்கு அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடும் தைரியத்தை விருதுநகர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு யார் தந்தது..? இன்றைக்கு அவர் அனுபவிக்கும் பல்வேறு உரிமைகளை சங்கங்கள் பெற்று தந்த வரலாறு இவருக்கு தெரியாதா.?.
இவர் பெற்று வரும் ஏழாவது ஊதியக்குழு செப்டம்பர் 2017 ல் ஜாக்டோ ஜியோ சங்கங்கள் போராடி பெற்று தந்தது. இந்திய அரசியலமைப்பு, ஜனநாயக ரீதியாக சங்கம் நடத்துவதற்கும் கோரிக்கைகளை வைத்து போராடுவதற்குமான தந்த உரிமைகளை தட்டிப் பறிக்க இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது.!?
போராடுவதற்கு அனுமதி கேட்கச்சொல்லும் உங்களை விரைவில் களத்தில் சந்திப்போம், என சவால்விட்டுள்ளனர்.
இதனால் தொடக்க கல்வித்துறையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.