கொரோனா பெருந்தொற்று காலத்தில், பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு உதவிடும் வகையில், இளைஞர் பட்டாளம் உள்ளடக்கிய வேர் அமைப்பினர், கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று கோவையில் நடந்தது.
வேர் அமைப்பு நிறுவனர் வசந்த் தலைமை தாங்கி பொருட்களை வழங்கி சிறப்பித்தார். நிகழ்வின்போது, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களான ஸ்டேஷ்னரி பொருட்கள், கணித பெட்டி, தன்னம்பிக்கை கதை புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள் என 300 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுதவிர, மாணவர்கள் குடும்பங்களுக்கு மளிகை தொகுப்பும் வழங்கப்பட்டது. இதுகுறித்து வேர் அமைப்பு நிறுவனர் வசந்த் கூறும்போது, கொரோனா தொற்று காலத்தில் பழங்குடியினர் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய கோவையில் உள்ள சின்னாம்பதி, புதுப்பதி, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றபோது, கல்வி செயல்பாடுகள் இல்லாமல் இருந்தனர். இதைதொடர்ந்து, வேர் அமைப்பு மாணவர்களுக்கு உதவிடும் வகையில், கல்வி உபகரணங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அப்பகுதியில் உள்ள சுமார் 300 குழந்தைகளுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டது. இது அவர்களது கல்விற்கு சிறிய உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம், இவ்வாறு அவர் கூறினார். பின்னர், அப்பகுதியில் மதிய அசைவ விருந்து நடைபெற்றது. வேர் அமைப்பு செயலர் சந்தோஷ், பொருள் டேவிட், கமிட்டி உறுப்பினர் நவீன், வினு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.