Valappadi government model school | மாணவரிடம் இடியாப்ப சிக்கலில் சிக்கிய ஆசிரியர்
Valappadi government model school
வாழப்பாடி, அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டிசி வாங்க வந்த முன்னாள் மாணவரிடம், ஒரு கட்டு பேப்பர் கேட்ட ஆடியோ வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் பிரமோஸ் 25, என்பவர் நேற்று மதியம் 1 மணியளவில் தன் தாயுடன் டிசி வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு ஆசிரியர், ஒரு கட்டு ஏ4 பேப்பர் தலைமை ஆசிரியர் வாங்கி கொடுக்கும்படி, கேட்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணவரின் உறவினர், பேப்பராக வேண்டுமா அல்லது பணமாக தருகிறேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்பின் ஆசிாியர், விருப்பம் இருந்தால் வாங்கி கொடுங்கள், இல்லையென்றால் தேவையில்லை என மழுப்பியுள்ளார். இந்த ஆடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் ரவீந்திரன் கூறுகையில், ஏ4 பேப்பர் கட்டு கேட்பது லஞ்சம் கிடையாது. பணம் வாங்கினால்தான் தவறு. அலுவலக பயன்பாட்டிற்கு பேப்பர் கட்டு வாங்குவதற்கு தமிழக அரசு நிதி கொடுப்பதில்லை. இதனால் டிசி வாங்க வந்த முன்னாள் மாணவரிடம் பேப்பர் கேட்கப்பட்டது, என்றார்.