Valangaiman BEO Arrest | வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் கைது
Valangaiman BEO Arrest
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் உள்ள பழமையான காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள விநாயகர் கற்சிலை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருடு போனது.
இதையடுத்து கோயில் சிலை திருட்டு தொடர்பாக, கரம்பயம் மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் சக்திவேல் அளித்த புகாரின்பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், பாப்பாநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமாரவேல் தலைமையிலான தனிப்படை போலீசார், குறிச்சி காசி விஸ்வநதாதர் கோயில் அருகே உள்ள மாரியம்மன்கோரில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த ஊரில் ஏற்கனவே அரசு நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும், தற்போது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரத்தில் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருபவருமான சி செல்லத்துரை (59) இருசக்கர வாகனத்தில் விநாகயர் கற்சிலையை திருடிக்கொண்டு சென்றது தெரியவந்தது.
Read Also: வட்டார கல்வி அலுவலர் மீது வசூல் புகார்
தொடர்ந்து பட்டுக்கோட்டையில் தனது மகளின் வீட்டில் உள்ள செல்லத்துரையை போலீசார் நேற்று கைது செய்து திருடிய சிலையை மீட்டனர். செல்லத்துரை குறிச்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய போது ஊரில் உள்ள சிலருடன் முன் விரோதம் இருந்துள்ளது. ஆத்திரமடைந்த செல்லத்துரை கோயில் சிலையை திருடி சென்றால், அந்த ஊரில் திருவிழா தடைபடும் என்பதால் சிலையை திருடியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.