Unemployment Issue in Tamil Nadu 22.80 லட்சம் பட்டதாரிகள் வேலைக்காக காத்திருப்பு
தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சி துறை 30.11.2020ம் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்புக்காக பதிவு செய்யப்பட்டவர்கள் புள்ளி விவர பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், 63,41,639 பேர் பதிவுதாரர்களாக உள்ளனர் என தெரிவித்துள்ளது.
பொதுவிவரம்:
- 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் விவரம் - 18,15,432 பேர்.
- 19 வயது முதல் 23 வயது வரை பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் - 11,28,412 பேர்.
- 24-35 வயது வரை அரசுப்பணி வேண்டி காத்திருக்கும் வேலைநாடுநர்கள் - 22,83,209 பேர்.
- 36 வயது முதல் 57 வயது வரை முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் - 11,05,761 பேர்.
- 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் - 8,825 பேர்.
மாற்றுதிறானாளி பதிவுதாரர்கள் விவரங்கள்:
- கை, கால் குறைபாடு உடையோர் – 1,03,268 பேர்
- விழிப்புலனிழந்தோர் - 16,192 பேர்
- காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் – 13,792.