தமிழகத்தில் சமக்ரா சிக்ஷா நிதியை கண்காணிக்க மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் என பிரதமர் அலுவலகத்திற்கு வேலையில்லா கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் மனு அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, அவர்கள் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும் நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தப்படுகிறதா, இல்லையா என்பதை கண்காணிக்க மத்திய அரசே குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு வேைலயில்லா பட்டதாரிகள் தரப்பில் கூறப்படுதாவது, தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்ததை அறிமுகம் செய்யவில்லை எனவும், மாறாக மூன்று பக்கங்கள் மட்டும் தமிழக பாடத்தில் வைக்கப்பட்டுள்ளது, என்றனர். மேலும் மத்திய அரசு தரப்பில் ஐசிடி எனப்படும் கணினி ஆய்வகம் பள்ளிகளில் அமைக்க நிதி ஒதுக்கியும் என்ன ஆனது தெரியவில்லை என்றும், ஐசிடி ஆய்வகத்திற்கு கணினி பயிற்றுநர்களை நியமிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். அதற்கு மத்திய அரசு நிதி வழங்கி கொண்டிருப்பதாகவும், இந்த நிதி எதற்கு பயன்படுத்தப்படுகிறது தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வழங்கப்பட்ட நிதிகள் மடைமாற்றம் செய்யப்படுவதாகவும், இதனை கண்காணிக்க மத்திய அரசே குழு அமைத்து ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியை தணிக்கை செய்து, அதனை கண்காணிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.