UGC Mother Language Exam in Tamil | தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதியுங்கள்
UGC Mother Language Exam in Tamil
தாய்மொழியில் கற்றல் கற்பித்தல் செயல்முறையை ஆதரிப்பதே உயர் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ள யூஜிசி (பல்கலைக்கழக மானியக்குழு) ஆங்கிலத்தில் பாடம் நடத்தப்பட்டாலும் தாய் மொழியில் தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தலையும் வழங்கி இருக்கிறது.
யுஜிசி தலைவா் தெரிவித்திருக்கும் இந்த கருத்துக்கள் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதற்கான ஒரு தொடக்கமாக கருதப்படுகிறது.
அதில், பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டாலும் பரிட்சையை தங்களுடைய தாய் மொழியிலேயே மாணவர்கள் எழுதுவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதுதான். அப்படி செய்வதன் மூலமாக அவர்களுடைய மன அழுத்தம் குறையும். அவர்கள் சுலபமாக தங்களுடைய தாய் மொழியிலேயே தங்களுடைய பாடங்களை படித்து அதற்கான தேர்வுகளை எழுதலாம். தமிழ் மொழிகளில் போன்ற தாய் மொழிகளில் இருந்து முக்கியமான நூல்களை மொழி பெயர்த்து அதையும் கற்பிக்க முயற்சி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Also: டெட் தேர்வு சமூகநீதி இடஒதுக்கீடு மறுப்பு
அதாவது ஆங்கிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், அனைத்து இந்திய மொழிகளுக்கும் அதாவது அந்த மாணவர்களுடைய தாய் மொழி என்னவோ அந்த பகுதியிலே உள்ள தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இது புதிய கல்விக் கொள்கையை தொடங்கி தொடர்ந்து இது வலியுறுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே கற்றால் அவர்கள் சிறப்பாக கல்வி பயில முடியும் என்பதும், சுலபமாக மன அழுத்தம் இன்றி கற்க முடியும் என்பதும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்தான் யுஜிசி இதனை தெரிவித்துள்ளது.
தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும் என்று ஏற்கனவே சில மாநிலங்கள் தரப்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று தற்போது பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி இந்த அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது.