செமஸ்டர் தேர்வு: நேரடி மற்றும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தலாம்
கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் மற்றும் வகுப்புகள் ஆன்லைன் மற்றும் நேரடியா முறையில் நடத்தலாம் என்று யுஜிசி என அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா தாக்கம் குறையாத நிலையில், உயர்கல்வி நிறுவனங்கள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் யுஜிசி நேரடி வகுப்புகள் மற்றும் நேரடி தேர்வுகள் மட்டுமே உயர் கல்வி நிறுவனங்கள் நடத்த வேண்டும் என்ற செய்திகள் இணையத்தில் உலா வந்தன. இதனால், சில உயர் கல்வி நிறுவனங்கள் 100 சதவீத மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வரவழைக்கப்பட்டனர்.
செமஸ்டர் தேர்வு
இதற்கிடையில், யுஜிசி, நேரடி வகுப்புகள், நேரடி தேர்வுகள் நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை தாங்கள் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, யுஜிசி புது அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், கொரோன தொற்று உருவானதிலிருந்து, உயர் கல்வி நிறுவனங்களின் கல்வி செயல்பாடுகளை பல்கலைக்கழக மானியக்குழு தொடர்ந்த கண்காணித்து, கல்வியாண்டு அட்டவணை, தேர்வுகள், கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டு வருகிறது. மேலும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்துவதை உறுதி செய்ய கோரப்பட்டுள்ளது.
ALSO READ THIS: இந்திய மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க வெளிநாடு செல்வது ஏன்?
இதை கருத்தில் கொண்டு, வளாகங்களை திறப்பது குறித்து உயர்கல்வி நிறுவனங்கள் தகுந்த முடிவை எடுக்கலாம். மேலும் யுஜிசி வழிகாட்டுதலின்படி ஆப்லைன், ஆன்லைன் கலப்பு முறையில் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்தலாம். இதுதவிர கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகளால் அவ்வப்போது வழங்கப்படும் நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள், வழிமுறைகளை மற்றும் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.