கல்லூரிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமிப்பது குறித்த பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) வரைவு அறிக்கைக்கு கருத்து தெரிவிக்கும் காலஅவகாசம் பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
யுஜிசி செயலர் மணிஷ் ஆர் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் ஆசிாியர்கள், கல்வி சார்ந்த பணியாளர்களை புதிதாக நியமிக்கவும், பதவி உயர்வு வழங்குவதற்கும் குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிப்பது தொடர்பான வரைவு அறிக்கை யுஜிசி சார்பில் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன் வரைவு அறிக்கைைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும், அதுகுறித்து கருத்துகளை பகிரவும் அழைப்பு விடுக்கப்பட்டது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.