Udhyanidhi Stalin press meet | விளையாட்டு தலைநகரமாக தமிழகத்தை மாற்றுவேன்
Udhyanidhi Stalin press meet
விமர்சனங்களுக்கு செயல்மூலம் பதில் தருவேன் என்றும், விளையாட்டின் தலைநகராக தமிழகத்தை உருவாக்குவேன் என்றும் அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார்.
கவர்னர் மாளிகையில் இன்று அமைச்சராக பதவி ஏற்ற பின்பு உதயநிதி ஸ்டாலின் அங்கு நிருபர்களிடம் கூறியதாவது,
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இளைஞரணி செயலாளராக பொறுப்பு ஏற்ற போது விமர்சனங்கள் எழுந்தது. சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது கூட விமர்சனங்கள் இருந்தது. விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன். எதிர்பார்ப்பு என்பது எல்லார் மீது இருக்கத்தான் செய்யும்.
வாரிசு அரசியல் என்கிற விமர்சனம் எனக்கு புதியது அல்ல. அனைத்து நிர்வாகிகளுடன் இணைந்து என்னால் முடிந்த அளவுக்கு எனக்கு கொடுத்த பொறுப்பை சரிவர செய்வேன்.
Read Also: ஆசிாியர் பணி தகுதி – நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்றும் திட்டம் உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும், அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோம் அதற்கான பணிகள் முடுக்கிவிடப்படும். அனைத்து விளையாட்டு வீரர்களை ஊக்கம் அளிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பொறுப்பேற்றுள்ள துறைகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் ஆலோசித்து, முதல்வரின் ஆலோசனையின் பெயரில், அமைச்சர்களின் அறிவுரையின்பேரில் செயல்படுவேன்.
திரைப்படங்களில் நடிப்பீர்களா என்று கேட்கிறீர்கள், நடிகர் கமல் தயாரிப்பில் படம் நடிக்க இருந்தேன். இதை கேட்டதும், அவர் முதலில் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால், நான் இனிமேல் நடிக்கவில்லை. இயக்குநர் மாரிசெல்வராஜின் மாமன்னன் திரைப்படம்தான் நான் நடிக்கும் கடைசிபடம்.
இவ்வாறு அவர் கூறினார்.