சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை கிராமத்தை சேர்ந்த சசிகுமாரின் எட்டு வயது மகள் சோபியா அக்கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சசிகுமாரின் தம்பி கண்ணப்பன் மகள் இஷ்மிகா அதே பள்ளியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார். இஷ்மிகா இயற்கை உபாதை கழித்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கான்வாடி ஊழியர் தினேஷ்ம்மாள், சுத்தம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. தொடக்கப்பள்ளியில் படிக்கும் தனது அக்காவான சோபியாவை அழைத்து கொண்டு பள்ளிக்கு எதிரே உள்ள கண்மாயிக்கு சென்றுள்ளார். கண்மாயில் இஷ்மிகா உள்ளே இறங்கியபோது, சிக்கியுள்ளார், மேலும் இஷ்மிகாவை காப்பாற்ற சென்ற அக்கா சோபியாவும் கண்மாயில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதில் மூச்சுத்திணறி இருவரும் உயிரிழந்தனர்.
Read Also: பள்ளி பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைபெற்றோர் மதியம் பள்ளிக்கு வந்து பார்த்த போதுதான் தெரியவருகிறது, இருவரும் கண்மாயில் மூழ்கி உயிரிழந்துள்ளது. இது அவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆத்திரம் அடைந்த உறவினர்கள், அங்கன்வாடி ஊழியர் தினேஷ்ம்மாள், தொடக்கப்பள்ளி ஆசிாியர் மேரி ஆகியோரை பள்ளி வகுப்பறையில் பூட்டி சிறைவைத்து, குழந்தைகள் சடலத்துடன் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மாலை வரை நடந்த அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு, குழந்தைகள் சடலம் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கன்வாடி ஆசிாியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆகிய இருவரும் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், தமிழக அரசு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கல்வித்துறைக்கு கரும்புள்ளியமாக மாறியுள்ளது.