அண்ணா பணியாளர் சங்க முன்னாள் நிா்வாகிகள் தொ.மு. சங்கத்தில் இணைந்தனர்
அண்ணா பணியாளர் சங்க முன்னாள் நிா்வாகிகள் தொ.மு. சங்கத்தில் தங்களை இணைந்துகொண்டனர். இதுகுறித்து நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மின்சாரம், கலால் (ம) ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மற்றும் முன்னாள் மேயர் கணபதி ப ராஜ்குமார் அவர்கள் முன்னிலையிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அண்ணா பணியாளர் சங்க முன்னாள் நிர்வாகிகளாகிய மாநில இணை செயலாளர் கே.ராமசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் வாட்டர் பழனிசாமி, மாவட்ட தலைவர் எஸ்.மாணிக்கம், மாவட்ட தலைவர் கே.பாலன், மாவட்ட பொருளாளர் ராஜீவ், எம்.சந்திரசேகர் துணை தலைவர் மற்றும் நிர்வாகிகள், எம் கனகராஜ், ஏ விஜயகுமாரன், வி.ராமச்சந்திரன், உடுமலை கே.எஸ்.ராஜா, ஜி கணேசன், சுந்தர்ஜி, ராம்குமார் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள், தொ.மு.சங்கத்தில் தங்களை இணைத்து கொண்டு, கோரிக்கை மனு வழங்கி ஆதரவு தெரிவித்தார்கள். இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.