TRUST Exam notification 2023 | ஊரக திறனாய்வு தேர்வு நவம்பர் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
TRUST Exam notification 2023
9ஆம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு வரும் டிசம்பர் 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த தேர்வுக்கு நவம்பர் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்்குவிக்கும் வகையில் ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தேர்வை ஊரக பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக நவம்பர் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்ப படிவம் தேர்வுத்துறை இணையதளத்தில் நவம்பர் 14ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ-10 மட்டும் செலுத்த வேண்டும். மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் நவம்பர் 17ம் தேதி முதல் 28ம் க்குள் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்களின் விண்ணபங்கள் மற்றும் தொகுப்பறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.