TRUST Exam Hall Ticket Download link 2023
அரசு தேர்வுகள் இயக்ககம், இணை இயக்குனர் (பணியாளர்) பூ.ஆ.நரேஷ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு (டிரஸ்ட்) 16.12.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. மாணவர்கள் பட்டியலுடன் கூடிய வருகை தாட்கள் (Nominal Roll Cum Attendance Sheet) தேர்வு மையம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு மையமாக செயல்படும் பள்ளியின் யூசர் ஐடி, பாஸ்வோர்டு பயன்படுத்தி 12.12.2023 (இன்று) முதல் பதவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுகூட நுழைவுச்சீட்டுகளை 12.12.2023 பிற்பகல் முதல் பள்ளி தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளியின் யூசர் ஐடி, பாஸ்வோர்டு பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தலைமை ஆசிரியர்கள் தேர்வு விவரங்களை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.