TRUST Exam Hall Ticket Download 2022 | ஊரக திறனாய்வு தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு
TRUST Exam Hall Ticket Download 2022
அரசு தேர்வு இயக்ககம் இணை இயக்குனர் க செல்வகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு (TRUST) 10.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர் பட்டியலினன தேர்வு மையம் வாரியாக
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 2.12.2022 பிற்பகல் முதல் தங்கள் பள்ளிக்கான யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்டு – ஐ கொண்டு பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read Also: ஊரக திறனாய்வு தேர்வு
ஊரக திறனாய்வு தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு
மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுக்கூட சீட்டுக்களை 2.12.2022 பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளிக்கான யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்டு ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு ஊரக திறனாய்வு தோ்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு வழங்கவும், தோ்வு மைய விவரத்தினை அம்மாணவர்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
மேலும் தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் பெயர்/பிறந்ததேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் தவறினை சிவப்பு நிற மையினால் கழித்து சரியான திருத்தத்தினை குறிப்பிட்டு அப்பள்ளி தலைமை ஆசிரியர் சான்றொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு அத்தேர்வர்களை தேர்வு எழுத அனுமதித்திட தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.