அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு 1.2.2025 அன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
Read Also: ஜனவரி மாதம் சிறார் திரைப்படம் லிங்க் தற்போது பாரத சாரணியர் இயக்கத்தின் வைரவிழா வரும் 28ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை மணப்பாறை திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளதால், மாணவர்களின் நலன் கருதி, ஊரக திறனாய்வு தேர்வு பிப்ரவாி 8ம் தேதி அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. தேர்வு தேதி மாற்றம் குறித்து விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டும். மேலும், புதிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) பிப்ரவரி 3ம் தேதி பிற்பகல் முதல் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவர்தம் மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்துவதோடு தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் புதிய பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.