வட்டார கல்வி அலுவலகத்தில் கிடா விருந்து ஏற்பாடு செய்து இரண்டு வட்டார கல்வி அலுவலர்களை மனதை குளிர்வித்துள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கதையை தொிஞ்சுக்கலாமா....
மாங்கனி மாவட்டத்தில் மங்களகரமான வட்டாரத்தில் இரட்டை மங்கையர்கள் கடந்த டிசம்பா் 2021 கலந்தாய்வின்போது இங்கு வந்தார்கள். அதாவது இவர்கள் வேலையில் ரொம்ப ஸ்ட்ரிட்ன்னு சொல்லுவாங்களாம், ஆமாங்க. இரட்டையர்கள் வட்டாரத்திற்கு வந்துவுடன், நாங்கள் வேறமாதிரி என்பதுபோல், ஏற்கனவே கல்வித்துறையில் வரிசை படி இருந்த, பள்ளிகளின் தர வரிசை எண்களை மாற்றி அதிர வைத்தார்களாம். இது தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக சிக்கலை ஏற்படுத்துவதாக அவர்கள் புலம்பி தள்ளுகிறார்கள். அதுமட்டுமா... இன்னும் கேளுங்க... ஒரே வட்டாரத்தில், இவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பள்ளியில் ஆய்வு செய்யமாட்டார்களாம், எல்லை தான்டிதான் பள்ளிகளை ஆய்வு செய்வார்களாம், ஏனா ஸ்ட்ரிக்ட் ஆபிஸர். இது தவிர, சில சமயங்களில் இவர்கள் கூட்டாகத்தான் ஆய்வு பணிக்கு செல்வார்களாம். அப்படி ஒரு தனி அதிகாரம் கல்வித்துறை இவர்களுக்கு வழங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை. கூடுதல் தகவல், இவர்களுக்கு இரு சக்கர வாகனம் ஓட்ட தெரியாதாம், அதற்கு டிரைவர் போல் தலைமை ஆசிரியர்களை பயன்படுத்துவது உச்சபட்ச அதிகாரத்தின் அபத்தம் என விஷயம் தெரிந்த சக ஆசிரியர்கள் பரபரப்பாக பேசி கொள்கிறார்களாம். அப்படி தலைமை ஆசிரியர்கள் டிரைவர் வேலைக்கு சென்றால், அந்த பள்ளி மாணவர்கள் கல்வி நிலை என்னவாக இருக்கும். டிரைவர் வேலை செய்வதற்கா அல்லது பாடம் நடத்தவா இவர்களுக்கு அரசு சம்பளம் வழங்குகிறது என சக ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதுபோல் இன்னும் ஏராளமாம். அப்படியே, கிடா விருந்து கதைக்கு போனால், சமீபத்தில் ஒரு பள்ளி சிறந்த பள்ளிக்கான விருது வாங்கியது. எழுதப்படாத மரபுபடி, வட்டார கல்வி அலுவலர்கள்தான் விருதை பள்ளிக்கு எடுத்துச்சென்று, தலைமை ஆசிரியர்களை கவுரவிப்பது வழக்கம். ஆனால், இங்கு நிலைமாறி, தலைமை ஆசிரியரே வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று விருது வாங்கி, மங்கையர்களிடம் ஆசி பெற்றாராம். மாறாக மங்கையர்கள் தாங்கள் பாணியில், ட்ரீட் கேட்டுள்ளார்கள். ஆஹா, ஆஹா அதிகாரிகள் கேட்டு நாம் மறுப்பதா என பொங்கிய தலைமை ஆசிரியர், அடுத்த நாளே கிடாய் வெட்டி, கம கம சமையலுடன் தயார் செய்து தனி கேரியரில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி, சந்தோஷம் அடைந்தாராம். தனி ராஜாங்கம் நடத்தும் இந்த வட்டாரத்திற்கு முருகப்பெருமான் ஏன் இன்னும் கருணை காட்டவில்லை என சக ஆசிரியர்கள் மனமுறுகி பிரார்த்தனை செய்கிறார்களாம். விரைவில் அவர் அவரது ஸ்டெய்லில் கருணை காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.