TRB Today Latest News | ஆசிரியர் தேர்வு வாரியம் இன்றைய செய்தி
TRB Today Latest News
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 01/2022, நாள் 7.3.2022ன்படி ஆசிரியா் தகுதி தேர்வு தாள் இரண்டிற்கான கணினி வழித்தேர்வுகள் (கம்ப்யூட்டர் பேஸ்டு எக்ஸாமினேஷன்) 3.2.2023 முதல் 15.2.2023 வரை இருவேளைகளில் நடத்தப்பட்டது.
இத்தேர்வில் 2,54,224 தேர்வர்கள் கலந்துகொண்டனர். இத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் 28.3.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் 15,430 தேர்வர்கள் இத்தேர்வில் தகுதி பெற்றனர்.
23.7.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியின்படி, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 24.7.2022 முதல் 27.7.2022 வரை ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் திருத்தங்கள் மேற்கொள்ள தற்போசூ அளிக்கும் கோரிக்கையின் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது என தெரிவிக்கப்படுகிறது.
Read Also: டெட் தேர்ச்சி அடிப்படையில் பணி நியமனம்
தற்போது விண்ணப்பதாரா்கள் தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களின் அடிப்படையில் ஆசிரிய தகுதி தேர்வு தாள் இரண்டு- ல் தகுதிபெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சான்றிதழ் (சார்டிபிகேட்) 13.4.2023 அதாவது இன்று முதல் மூன்று மாதம் வரை பதிவிறக்கம் செய்திடலாம் என்று விவரம் தெரிவிக்கப்படுகிறது. இ
வ்வாறு அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.