விரிவுரையாளர் காலிபணியிடம் ஆசிரியர் தோ்வு வாரியம் முக்கிய அறிவிப்பு
விரிவுரையாளர் காலிபணியிடம்
ஆசிரியர் தேர்வு வாரியம் சற்று முன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
2017-18ம் ஆண்டிற்கான அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான 1060 விரிவுரையாளர் காலிபணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் 14/2019, நாள் 27.11.2019 வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கணினி வழி தேர்வுகள் (CBT) 8.12.2021 முதல் 13.12.2021 வரை நடத்தப்பட்டு, தேர்வர்களின் மதிப்பெண்கள் 8.03.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் வெளியிடப்பட்டன.
READ ALSO THIS: டிஆா்பி அதிரடி – 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் பள்ளி, கல்லூரிகளில் நிரப்பு முடிவு
11.3.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில், பணி நாடுநர்கள் தங்கள கல்வித்தகுதி மற்றும் பணி அணுபவம் தொடர்பான கூடுதல் சான்றிதழ்களை/ஆவணங்களை ஆசிரியா் தேர்வு வாரிய இணையதளம் வாயிலாக 11.03.2022 முதல் 1.4.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.
பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள்/ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 பாடப்பிரிவுகளில் கீழ்காணும் 5 பாடங்களுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சாிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு அழைப்பு கடிதம், ஆளறிச் சான்றிதழ் படிவம், சுய விவரப்படிவம் மற்றும் தமிழ்வழி சான்றிதழ் (PSTM Certificate) ஆகியவை ஆசிரியர் தோ்வு வாரிய இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். தங்களது அழைப்பு கடிதம், ஆளறிச் சான்றிதழ் படிவம், சுய விவரப்படிவம் மற்றும் தமிழ்வழி சான்றிதழ் (PSTM Certificate) ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. அழைப்பு கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என பணி நாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட சான்றிதழ் சரிபார்ப்பு சார்ந்த கோரிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரிய URL Link வழியாக தெரிவிக்கலாம். பிற வழி கோரிக்கைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என திட்டவட்டமாக தொிவிக்கப்படுகிறது.
மேலும், அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் பணிதெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக இணையதளத்தில் வழியாகவும், செய்திக்குறிப்பின் வாயிலாகவும் தெரிவிக்கப்படும் என பணி நாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.