You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TRB Paper 1 postponed – டிஆர்பி தாள் 1 திடீர் ஒத்திவைப்பு

Typing exam apply Tamil 2023

TRB Paper 1 postponed – டிஆர்பி தாள் 1 திடீர் ஒத்திவைப்பு

TRB Paper 1 postponed

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 01/2022 நாள் 7.3.2022 அன்று வெளியிடப்பட்டது. 6.7.2022 பத்திரிக்கை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை தேதிகளில் தாள் – 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது.

Also Read: 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் பள்ளி, கல்லூரிகளில் நிரப்பு முடிவு

தற்போது நிர்வாக காரணங்களால் தாள் – 1ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்பட உள்ளது.

மேற்படி கணினி வழி தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணி நாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். இதுகுறித்த அறிவிக்கை தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு (அட்மிட் கார்டு) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.