TRB Latest News | 2098 ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பம் வரவேற்பு
TRB டிஆா்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் மேல்நிலைக் கல்வியில் உள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கிரேடு - 1 பணிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் விண்ணப்பம் வரவேற்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று பணியிடம் விண்ணப்பிப்பதற்காக அறிவிப்பு ஆணை வெளியிட்டுள்ளது.
மார்ச் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் மார்ச் 25ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பத்தை ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஜீன் 26 மற்றும் 27ம் தேதிகளில் இந்த பணியிடத்திற்கான எழுத்து தேர்வு நடக்கும் என டிஆர்பி தெரிவித்துள்ளது.