You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்ட செய்தி

TRB latest news in tamil

ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் UGC வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாநிலத் தகுதித் தேர்வு (TNSET) கணினி வழி தேர்வுகள் (Computer Based Examination), 06.03.2025, 07.03.2025, 08.03.2025 09.03.2025 ஆகிய நாட்களில் காலை / மாலை இருவேளைகளில் நடத்தி முடிக்கப்பட்டது.

தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer key) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான https://trb.tn/gov.in/ -ல் வெளியிடப்பட்டுள்ளன. 

தேர்வர்கள் தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer key) மீது இணைய வழியில் ஆட்சேபணை (objection) தெரிவிக்க 13.03.2025 முதல் 15.03.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்பொழுது தேர்வர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் அக்கோரிக்கைகளைப் பரிசீலித்து உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer key) மீது இணைய வழியில் ஆட்சேபணை செய்ய கால நீட்டிப்பு வழங்க முடிவு செய்து, கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

மேலும், தேர்வர்கள் அவர்களுடைய Response Sheet-ஐப் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான தகவல் குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.