TRB Latest News | டிஆர்பி வெளியிட்ட முக்கிய செய்தி
TRB Latest News
ஆசிரியர் தேர்வாணையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பள்ளி கல்வி இயக்கத்திற்கு 2023-2024ஆம் கல்வியாண்டில் 2222 பட்டதாரி ஆசிரியர், வட்டாரவள மைய பயிற்றுநர் தெரிவிற்கான அறிவிக்கை 03/2023 நாள் 25.10.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, பள்ளி கல்வி இயக்ககம், தொடக்க கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் நிரப்பப்பட வேண்டிய 360 பணியிடங்களுக்கான கூடுதல் காலிப்பணியிட விவரங்கள் (அறிவிக்கை எண் 3A/ 2023) ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (website:
http://www.trb.tn.gov.in) இன்று (15.11.2023) இன்று வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அதில் தொிவிக்கப்பட்டுள்ளது.