You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TRB Computer Based Examination 2022| டிஆர்பி பயிற்சி தேர்வு முக்கிய அறிவிப்பு

Typing exam apply Tamil 2023|

TRB Computer Based Examination 2022 | டிஆர்பி பயிற்சி தேர்வு முக்கிய அறிவிப்பு

TRB Computer Based Examination 2022

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் இன்று வெளியிட்ட பத்திரிக்கை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்  01/2022 நாள் 7.03.2022 அன்று வெளியிடப்பட்டது. இணைய வழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.03.2022 முதல் பதிவேற்றம் செய்திடலாம். என தெரிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.4.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது ஆகஸ்டு 25ம் தேதி முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள் ஒன்றிற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வா்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

READ ALSO THIS: டெட் தேர்வு எப்போது? ஆகஸ்டு 25ம் தேதி துவக்கம் – டிஆர்பி அறிவிப்பு

மேற்படி கணினி வழித்தேர்விற்காக (computer based examination)  பயிற்சித்தேர்வு (practices test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணி நாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலம். இது குறித்த அறிவிக்கை தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிசீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட்டு இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

TRB Computer Based Examination 2022
TRB Computer Based Examination 2022